ஆண் குழந்தைக்கு தாயான 90’ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்!

0
ஆண் குழந்தைக்கு தாயான 90'ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியல் நடிகை - குவியும் வாழ்த்துக்கள்!
ஆண் குழந்தைக்கு தாயான 90'ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியல் நடிகை - குவியும் வாழ்த்துக்கள்!
ஆண் குழந்தைக்கு தாயான 90’ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சின்னத்திரையில் 90’ஸ் கிட்ஸ்களின் பிரபலமான சீரியலான “காதலிக்க நேரமில்லை” சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை சந்திரா லக்ஷ்மணன் தற்போது ஆண் குழந்தைக்கு தாயாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆண் குழந்தை:

சின்னத்திரையில் ஒரு சில சீரியல்கள் மறக்க முடியாத தொடர்களாக ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான “காதலிக்க நேரமில்லை” சீரியல் தற்போது வரை அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இன்னும் அந்த சீரியல் பாடலை கேட்டால் ரசிகர்கள் முனுமுனுப்பது வழக்கம்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் அந்த சீரியல் ஹீரோவாக நடிகர் ப்ரஜின் நடித்து இருந்தார். தற்போதும் அவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை சந்திரா லக்ஷ்மணன், அந்த சீரியலுக்கு பின் தமிழில் அவ்வளவாக சீரியலில் நடிக்கவில்லை. இந்நிலையில் அவர் தன்னுடைய 38 வயதில் உடன் நடித்த சீரியல் நடிகர் டோஷ் கிரிஸ்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிறைக்கு சென்ற அசிம், சிவின்.. செம ஹாப்பியாக இருக்கும் ஹவுஸ்மெட்ஸ் – வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!

Follow our Instagram for more Latest Updates

மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்த அவர் திருமணத்திற்கு பின் படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். அந்த வகையில் சந்திரா லக்ஷ்மணன் தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதாவது அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருடைய அந்த பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!