‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதில் புதிய கண்ணம்மா இவர் தானா? இணையத்தில் கசிந்த தகவல்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி விலக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சில நடிகைகளின் பெயர் அடிபட்டு வருகிறது.
பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அதிகளவு பார்வையாளர்களை கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியலாகும். கிட்டத்தட்ட 600 எபிசோடுகளை கடந்திருக்கும் இந்த சீரியல் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. அதாவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இதுவரை மறைக்கப்பட்டு வந்த எல்லா உண்மைகளும் ஒவ்வொன்றாக வெளிவந்துள்ளது. அந்த வகையில் ஹேமா, கண்ணம்மாவின் குழந்தை என்கிற உண்மை இன்னும் பாரதிக்கு மட்டும் தெரிய வேண்டும்.
அதே போல பாரதி DNA டெஸ்ட் எடுத்தால் இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்லப்பட்டு வருகிறது. அதனால் இந்த இரு உண்மைகளும் விரைவில் வெளியாகிவிடும் என்பதால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடிவுக்கு வருவதாகவும், அதன் 2ம் பாகம் புத்தம் புதிய கதைக்களத்துடன் விரைவில் வெளியாகும் எனவும் பரவலாக பேசப்படுகிறது. இதற்கிடையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விலக இருப்பதாக ஒரு சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதையடுத்து நடிகை ரோஷினி அந்த சீரியலில் இருந்து விலகும் பட்சத்தில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் சன் டிவி சீரியல் நடிகை கேப்ரியல்லா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் கேப்ரியல்லா நடித்து வரும் ‘சுந்தரி’ சீரியலுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் சூழலில் அவர் ‘பாரதி கண்ணம்மா’சீரியலுக்கு வருவது சந்தேகம் என தெரிகிறது. அதே நேரத்தில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடிகை வைஷ்ணவி நடிக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.
ஏனென்றால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பதால் அதற்கு ஏற்ற தோற்றத்தை நடிகை வைஷ்ணவி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதே போல ‘வேலைக்காரன்’ சீரியல் நடிகை கோமதி ப்ரியாவும் கண்ணம்மா கதாப்பாத்திரத்துக்கு பொருத்தமானவராக இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தவிர விஜய் டிவியில் 2 புதிய சீரியல்களில் ஒளிபரப்பாக இருப்பதால் விரைவில் ‘வேலைக்காரன்’ சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தெரிகிறது. அதனால் நடிகை ப்ரியா, கண்ணம்மா ரோலுக்கு பொருத்தமாக இருப்பார் என்பது ரசிகர்களின் கணிப்பாக இருந்து வருகிறது.