ஜூன் 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – காலை 10 மணிவரை கடைகளை திறக்க அனுமதி!

0
ஜூன் 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - காலை 10 மணிவரை கடைகளை திறக்க அனுமதி!
ஜூன் 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - காலை 10 மணிவரை கடைகளை திறக்க அனுமதி!
ஜூன் 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – காலை 10 மணிவரை கடைகளை திறக்க அனுமதி!

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் சற்று குறைந்தாலும் ஒரே நாளில் 15 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவதால் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பரவல் காரணமாக ஜூன் 7 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரம் போல் இல்லாமல் தற்போது பாதிப்பு குறைந்தாலும் தினசரி 15% பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகின்றனர். பல கிராமப்புறங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை வல்லுநர்கள் ஆலோசனை வழங்கினர்.

TN Job “FB  Group” Join Now

ssc

இந்நிலையில் அம்மாநில அரசு ஜூன் 14 வரை தற்போது அமலில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி உள் மாவட்டங்களுக்கு இடையேயான கட்டுப்பாடுகள் அனைத்தும் வழக்கம் போல் இருக்கும். மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கடைகளுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை வெளியே வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மதியம் 2 மணி வரை நீடிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உத்திர பிரதேசத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து – கொரோனா பரவல் எதிரொலி!!

தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழ், மேலும் இறப்பு எண்ணிக்கையும் குறைந்தால் மட்டுமே தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 61 நாட்களில் பெங்களூரில் மொத்தம் 7.2 லட்சம் கோவிட் -19 வழக்குகள் மற்றும் 8,716 இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் செப்டம்பர் மாதத்தில் மூன்றாம் அலை கொரோனா தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!