நாட்டில் இனி சுங்க சாவடி தேவையில்லை – மத்திய அமைச்சர் முக்கிய தகவல்!

0
நாட்டில் இனி சுங்க சாவடி தேவையில்லை - மத்திய அமைச்சர் முக்கிய தகவல்!
நாட்டில் இனி சுங்க சாவடி தேவையில்லை - மத்திய அமைச்சர் முக்கிய தகவல்!
நாட்டில் இனி சுங்க சாவடி தேவையில்லை – மத்திய அமைச்சர் முக்கிய தகவல்!

தேசிய நெடுஞ்சாலைகளுக்கான சுங்க வரிகளை வசூலிப்பது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு புதிய யோசனைகளையும் ஆலோசித்து வருவதாக மத்திய அமைச்சர் நிதி கட்கரி தெரிவித்துள்ளார். அதன்படி, இனி நாட்டில் எங்கும் சுங்க சாவடிகள் தேவைப்படாது என்று கூறியுள்ளார்.

சுங்க சாவடிகள்:

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நெடுஞ்சாலை துறையின் தேசிய நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்க சுங்க சாவடிகளின் மூலமாக சுங்க வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் விதிகளின் படி, நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைப்பதற்கான கட்டணம் முழுவதுமாக வசூலாகும் காலம் வரை மட்டுமே முழுமையான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆண்டிற்கு ஒரு முறை சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது.

சமீபத்தில் செப்டம்பர் 1ம் தேதி அன்று சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வாகன ஓட்டிகள் நேரடியாக சுங்க சாவடிகளில் மட்டுமே, கட்டணத்தை செலுத்த வேண்டியது இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ‘பாஸ்டேக்’ முறையின் மூலமாக வாகன ஓட்டிகள் ஆன்லைனில் முன்னதாக தங்களது வாகனத்திற்கான கட்டணத்தை செலுத்தும் வசதி வந்தது. இதனால் காத்திருக்கும் நேரம் குறைந்தது. இந்நிலையில், தற்போது மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள், ‘பாஸ்டேக்’ முறை பயன்பாட்டிற்கு வந்த பிறகு ஆண்டுக்கு நாட்டின் வருவாய் ரூ.15,000 கோடி அதிகரித்துள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் JEE நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் – சென்னை ஐஐடி இயக்குநர் விளக்கம்!

Exams Daily Mobile App Download

இதனால் வாகனங்கள் காத்திருப்புக்கான நேரமும் குறைந்துள்ளது. இருப்பினும், இன்னும் ஒரு சில இடங்களில் ‘பாஸ்டேக்’ முறைக்கு பதிலாக வாகனங்கள் நேரடியாக காத்திருந்து கட்டணத்தை செலுத்தும் நிலை நீடிக்கிறது. இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு புதிதாக இரண்டு திட்டங்களை குறித்து ஆலோசித்து வருகிறது. அதன்படி, ஜி.பி.எஸ்.,மூலமாக வாகனங்களின் இருப்பிடம் அறிந்து கட்டணத்தை வசூலிப்பது, அல்லது வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து வாகன ஓட்டிகளின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக கட்டணத்தை வசூலிப்பதுமாகும். இது குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்து வரும் நிலையில், இறுதி கட்ட முடிவு எடுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு இவை அமலுக்கு வரும் பட்சத்தில் நாட்டில் இனி சுங்க சாவடிகளே தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here