கார்த்தியின் காதலை ஏற்காத கோதை, சரஸ்வதி கூறியதை நம்பும் அப்பா – இன்றைய எபிசோட்!

0
கார்த்தியின் காதலை ஏற்காத கோதை, சரஸ்வதி கூறியதை நம்பும் அப்பா - இன்றைய எபிசோட்!
கார்த்தியின் காதலை ஏற்காத கோதை, சரஸ்வதி கூறியதை நம்பும் அப்பா - இன்றைய எபிசோட்!
கார்த்தியின் காதலை ஏற்காத கோதை, சரஸ்வதி கூறியதை நம்பும் அப்பா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று கார்த்தி திருமணம் குறித்து தமிழின் அப்பா கோதையிடம் பேசுகிறார். மறுபக்கம் வீட்டில் சரஸ்வதி பணத்தினை திருடவில்லை என்று குடும்பத்தினர் தெரிந்து கொள்கின்றனர்.

“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று கோதையிடம் கார்த்தி திருமணம் குறித்து எப்படி பேச என்று தமிழ், கார்த்தி மற்றும் அவர்களது அப்பா யோசனை செய்கின்றனர். பின், சாப்பிடும் போது தமிழின் அப்பா மெதுவாக வசுந்தராவின் அம்மா கார்த்தியை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்டதாக கூறுகிறார். இதனை கேட்டு கோதை குழப்பம் அடைகிறார். அதே போல் பெரியவனாக தமிழ் இருக்கும் போது கார்த்திக்கு எப்படி திருமணம் செய்து வைக்க முடியும் என்றும், அதனால் இதனை பற்றி இனி வீட்டில் பேச வேண்டாம் என்றும் கூறி விடுகிறார். இது பற்றி யோசிக்கலாம் என்று அனைவரும் சென்று விடுகின்றனர்.

சமையல் போட்டியில் கலந்து கொள்ளும் சந்தியா, கற்றுக்கொடுக்கும் சரவணன் – இன்றைய எபிசோட்!

சரஸ்வதி வீட்டில் சரஸ்வதியை வெளியே நிற்க வைத்ததற்கு அவரது பாட்டி லிங்கத்திடம் சண்டை போடுகிறார். பின், லிங்கம் காலையில் மோட்டார் சரி செய்ய வேண்டும் என்பதற்காக 3000 ரூபாய் பணத்தினை தன்னிடம் கொடுத்ததாக ஒருவர் போன் செய்து கூறியதும் தான், லிங்கத்திற்கு தான் அவரிடம் பணம் கொடுத்தது குறித்து ஞாபகத்திற்கு வருகிறது. இதனை கேட்கும் அவரது பாட்டி, லிங்கத்தினை நன்றாக திட்டி விட்டு, சரஸ்வதியை வீட்டிற்குள் அழைக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின், சரஸ்வதியிடம் 3000 ரூபாய் பணம் எவ்வாறு கிடைத்தது என்று அனைவரும் கேட்கின்றனர். தான் படிப்பில் சாதிக்கவில்லை என்றாலும், கோலம், பாட்டு போட்டி போன்றவற்றில் வாங்கிய அனைத்து கேடயங்களையும் விற்று பணத்தினை பெற்றதாக கூறுகிறார். இதனை கேட்டு லிங்கத்திற்கு அழுகை வந்து விடுகிறது. காவியா, சரஸ்வதியிடம் வந்து மன்னிப்பு கேட்கிறார். பின், சரஸ்வதியிடம் லிங்கம் மன்னிப்பு கேட்க வரும் போது அவரை பாட்டி திட்டி வெளியே அனுப்பி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here