தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்படும் – அரசு அறிவிப்பு!!

2
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்படும் - அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்படும் - அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்படும் – அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே 6 (நாளை) முதல் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் கடைகள்:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை தினசரி புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் நோய் பரவல் குறையாத காரணத்தால் பல்வேறு கட்டுப்பாடுகள் நாளை (மே 6) முதல் அமலுக்கு வர உள்ளன. அதன்படி நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த அறிவிப்பில் டாஸ்மாக் கடைகள் செயல்படுவது குறித்து குறிப்பிடப்படவில்லை. இதனால் பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் (மே 6) டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு – விஜயகாந்த் வலியுறுத்தல்!!

அதன்படி காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை என 4 மணிநேரம் மட்டுமே டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என மருத்துவர்கள், தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Nailla naill ya yavanum work panna yosippanga eintha nealamayiela 8manikku open pannuna supera erukkum Tamil nadu erukkera Corona problem ku wineshop rompa mukkiyam than

  2. டாஸ்மாக் கடைகள் முற்றிலும் மூடப் பட வேண்டும் என்பதே எனது கருத்து.
    இந்த திராவிட அரசியல் மக்களுக்கானது அல்ல ?
    இதை மக்கள் உணர்ந்தால் நல்லது.
    திராவிட அரசியல்? மக்கள் நலன் குறித்து என்று சிந்தித்தார் கள்??
    மாற்றம் வருமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!