தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

0
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

இன்று (ஜூன் 20) நீலகிரி, கோவை, தேனி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 21.06.2021 அன்று நீலகிரி, கோவை மாவாட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் சென்னை, புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 22.06.2021 அன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னடலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைகள் – ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னடலுடன் கூடின லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23.06.2021 அன்று நீலகிரி, கோவை, சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

24.06.2021 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு? நிதியமைச்சர் விளக்கம்!

அடுத்த 48 மணி நிறத்திற்கு மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடிமின்னடலுடன் கூடிய லேசான முதல் மிதமான மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தேவலா, டேனிஷ்பேட்டை, ஹரூர், சென்னை, நுங்கம்பாக்கம், மணலூர்பேட்டை, முகையூர் தலா 2 செமீ, வால்பாறை, சாத்தனூர் அணை, எம் ஜி ஆர் நகர், திருவண்ணாலை, பந்தலூர் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

20.06.2021 வடக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளது. 20.06.2021, 21.06.2021 அன்று கேரள, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 20.06.2021 முதல் 24.06.2021 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!