தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வானிலை அறிக்கை:
இலங்கைக்கு தென் கிழக்கே 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 19.03.2021 மற்றும் 20.03.2021 தேதிகளில் கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழகத்தில் மதுபான கடைகள் மூடல் – உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை!!
21.03.2021 முதல் 23.03.2021 வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
TN Job “FB
Group” Join Now
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு பதிவாகவில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென அறிவுறுறுத்தப்படுகிறார்கள்.