
தமிழக மாணவர்களின் அடிப்படை வாசிப்புத் திறன், கணிதத்திறன் குறைவு – ASER வெளியிட்ட ஷாக்கிங் ரிப்போர்ட்!!
கொரோனா பரவலின் போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் அடிப்படை வாசிப்புத் திறன், கணிதத்திறன் குறைந்துள்ளதாக ஆண்டு கல்வி அறிக்கை (ASER) வெளியிட்டுள்ளது.
வாசிப்பு திறன்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை என 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயக்கப்படவில்லை. அதனால் மாணவர்களுக்கிடையே கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. இதனால் நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
உஷார் மக்களே.. ஜன.24 உங்கள் பகுதியில் மின்தடையா? – மின்வாரிய அறிவிப்பு!
இந்த நிலையில் மாணவர்களின் வாசிப்பு திறன், கணிதத்திறன் கடந்த 2018ம் ஆண்டை விட 2022ம் ஆண்டில் மிகவும் பின்தங்கியுள்ளதாக ஆண்டு கல்வி அறிக்கையில் (ASER) தெரிவிக்கப்பட்டுள்ளது. ASER ஆனது 31 மாவட்டங்களில் உள்ள 920 கிராமங்களில் 30,377 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 3ம் வகுப்பு மாணவர்களின் படிக்கும் திறன் 2018ம் ஆண்டு 10.2 % ஆக இருந்தது என்று தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில், 2022ம் ஆண்டில் மாணவர்களின் வாசிப்பு திறன் 4.8% சதவீதமாகக் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மாணவர்களின் படிக்கும் திறன் 2018ம் ஆண்டில் 27.3% ஆக இருந்த நிலையில் தற்போது (2022) 20.5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் கணிதத்திறனும் கடந்த 2018ம் ஆண்டை விட 2022ம் ஆண்டில் சரிந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.