Home news 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அப்டேட் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அப்டேட் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!

0
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அப்டேட் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

பொதுத்தேர்வு ஏற்பாடு

தமிழகத்தில் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதியும் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுகளை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறையின் அரசு தேர்வு துறை சார்பில் அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள்.

EB கட்டண விவரங்கள் உடனுக்குடன் – தமிழக மின்வாரிய நடவடிக்கை!

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பொதுத்தேர்வை கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும், பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி இயக்ககங்கள், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி, மற்றும் பயிற்சி நிறுவனம், ஆசிரியர் தேர்வு வாரியம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி,தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் அரசாணை பிறப்பித்துள்ளாா்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here