Home news தமிழக ரேஷனில் துவரம் பருப்பு விற்பனை டிசம்பர் வரை நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு!

தமிழக ரேஷனில் துவரம் பருப்பு விற்பனை டிசம்பர் வரை நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு!

0
தமிழக ரேஷனில் துவரம் பருப்பு விற்பனை டிசம்பர் வரை நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு!
தமிழக ரேஷனில் துவரம் பருப்பு விற்பனை டிசம்பர் வரை நீட்டிப்பு - அரசு அதிரடி உத்தரவு!
தமிழக ரேஷனில் துவரம் பருப்பு விற்பனை டிசம்பர் வரை நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு!

தமிழக ரேஷன் கடைகளில் பொது விநியோக உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த பருப்புகள் விற்பனையானது வரும் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவரம் பருப்பு விற்பனை:

தமிழக ரேஷன் கடைகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொது விநியோகத் திட்டத்தில் மாதம் தோறும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, எண்ணெய், பச்சரிசி போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இதில் அரிசி, கோதுமை போன்றவை மத்திய மற்றும் மாநில அரசுகளின் இலவச மானிய ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு லிட்டர் பாமாயில் ரூபாய் 25, ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 25 பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஒரு கிலோ 30 என்று மானிய விலையில் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 108 மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு – செப்.9ல் ஏற்பாடு!

தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பின் விற்பனையானது கடந்த 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு அப்போது முதல் ரூபாய் 30க்கு விற்கப்பட்டு வருகிறது. சற்று முன் வரை துவரம் பருப்பின் சிறப்பு பொது விநியோகத் திட்டத்திற்கான கால அவகாசம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்திற்கான அவகாசத்தை வரும் டிசம்பர் மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளி சந்தைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை ரூ.200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here