டிச.6ம் தேதி மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழகத்தில் டிசம்பர் ஆறாம் தேதி அன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழக அரசின் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்களை அரசு பணிகளுக்கு நடத்தி வருகிறது. இவற்றைத் தவிர தனியார் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது தஞ்சாவூரில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் டிசம்பர் ஆறாம் தேதி அன்று 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஆதார் கார்டில் இதை மட்டும் சரியா அப்டேட் செய்துடுங்க – இல்லையேல் மிக பெரிய சிக்கல்!!
முகாமில் 10, 12ஆம் வகுப்பு, பட்ட படிப்பு, டிப்ளமோ, முதுகலை , பொறியியல், ஐடிஐ போன்ற எந்த கல்வி உடையவர்கள் பங்கேற்கலாம். முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வி சான்றிதழ்களுடன் தேவையான ஆவணங்களையும் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முகவரி:
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்,
பெரியார் நகர்,
தஞ்சாவூர்.
Follow our Twitter Page for More Latest News Updates