தமிழக காவல்துறையில் 11,741 காலிப்பணியிடங்கள் – மார்ச் 8 உடற்தகுதித் தேர்வு!!

0
தமிழக காவல்துறையில் 11,741 காலிப்பணியிடங்கள் - மார்ச் 8 உடற்தகுதித் தேர்வு!!
தமிழக காவல்துறையில் 11,741 காலிப்பணியிடங்கள் - மார்ச் 8 உடற்தகுதித் தேர்வு!!
தமிழக காவல்துறையில் 11,741 காலிப்பணியிடங்கள் – மார்ச் 8 உடற்தகுதித் தேர்வு!!

தமிழக சீருடை தேர்வு குழுமம் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 8 ஆம் தேதி உடற்தகுதி தேர்வு 41 மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர் உடற்தகுதி தேர்வு அறிவிப்பு:

தமிழக சீருடை தேர்வு குழுமம் சார்பில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர், ஆயுதப்படை, சிறப்பு காவல் படை, சிறை, தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள 11,741 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வுகள் அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அந்த தேர்வுகளில் 5 லட்சம் பேர் கலந்துகொண்டு எழுதினர். அதில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கான உடற்தகுதி தேர்வு தற்போது மார்ச் மாதம் 8 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8 ஆம் தேதி முதல் நடத்தப்படும் உடற்தகுதி தேர்வுகளில் மாநகர போலீஸ் 7, மாவட்ட எஸ்.பி 29, பட்டாலியன் ஆயுதப்படை 5 ஆகிய மையங்களில் முதற்கட்டமாக நடைபெறுகிறது.

அகில இந்திய குடிமைப் பணி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு!!

தமிழகத்தில் 41 மையங்களில் உடற்தகுதி தேர்வு 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக எஸ்.பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அவர்களின் வீடுகளுக்கே அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பகுதியில் உள்ள காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TN PC Result 2021

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!