தமிழகத்தில் இன்று (அக். 14) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!
தமிழகத்தில் கடந்த 511 நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மற்றம் இல்லை. அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
விலை நிலவரம்
பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே போர் நிலவி வருவதால் கச்சா எண்ணெய் விலை உயரும் என அச்சம் உருவாகி இருக்கிறது. இருந்தாலும் கச்சா எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில் சென்னையில் 511 நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. அதன் படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 38 சதவீதம் அகவிலைப்படி உயர்வு – அமைச்சர் உத்தரவு!
அதே போல டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று (அக்.14) காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் நிம்மதியில் இருந்தாலும் விலை எப்போது குறையும் என அவர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் எண்ணெய் நிறுவனங்கள் பொதுத் துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (ஓஎம்சி) சர்வதேச தரநிலை விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்வது குறிப்பிடத்தக்கது.