தமிழகத்தில் மே 31க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவர்கள் எதிர்பார்ப்பு!

9
தமிழகத்தில் மே 31க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவர்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் மே 31க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவர்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் மே 31க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு? மருத்துவர்கள் எதிர்பார்ப்பு!

தமிழகம் முழுவதும் தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்வில்லா முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. நாடு தழுவிய பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இது மேலும் பலன் அளிக்கும் என கூறப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் 35 ஆயிரம் வரை பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தவிர பலி எண்ணிக்கையும் சற்று உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு, பெருகி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்துவது தான் தீர்வு என ஆலோசித்து, மே 10 ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

மே 27 முதல் மே 30 வரை தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் – துணை கமிஷனர் அறிவிப்பு!!

இந்த ஊரடங்கு நடைமுறையின் போது அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகளை திறந்திருக்க காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டது. மேலும் பொது முடக்க காலத்திலும் கொரோனா பாதிப்புகள் தினசரி உயர்ந்து கொண்டே வந்தது. தவிர கிராமப்புறங்களில் கூடுதல் கண்காணிப்பு வளையம் இல்லாத காரணத்தாலும், போதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாததாலும் நோய்த்தொற்று அதிகரித்ததாக கருத்துக்கள் நிலவியது.

PVC ஆதார் அட்டையை பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!

அதனால் இந்த 2 வார முழு முடக்கத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் பலர் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். இதன் அடிப்படையில் எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கை ஒரு வாரம் நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. அதன் படி நேற்று (மே 24) துவங்கி இந்த தளர்வில்லா ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 31 ஆம் தேதி முடிவடையும் இந்த தளர்வில்லா முழு ஊரடங்கை ஜூன் மாதம் 7 ஆம் தேதி வரை அதாவது மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரி உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

ssc

தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறை கைவிடப்பட்டால் பாதிப்புகள் அதிகமாகும் என மருத்துவர்கள் கணித்துள்ளனர். அதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 7 வரை நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டால் சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வேளை இந்த ஒரு வார பொதுமுடக்கத்தினால் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தால் மட்டுமே, ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.

தமிழகத்தில் மே மாத மின்கட்டணம் செலுத்தும் வழிமுறை – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

எதுவாக இருந்தாலும் அது மக்களின் கையில் தான் இருக்கிறது என்பது தெளிவான உண்மையாகும். அதே நேரத்தில் மக்கள் அவசியம் இல்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்த்து, ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வருந்தி கேட்டுக்கொண்டுள்ளார். அதனால் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொது மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

9 COMMENTS

  1. கூடுதல் கட்டுப்பாடு விதிப்பதற்கு இப்போழுது எந்த தளர்வுகளும் இல்லையே..!

  2. It is not good, if always continuing lockdown to restrained the pandemic. It is totally absurd thing,
    If people come out epidemic will increased and if stay at home it will decreased!!!!??? What a ridiculous is this???
    Medical professionals are always threatening people that is their duty.., but livelihood is very very important matter to everyone, most of the office goers are suffering by this lockdown issue, doctors will not give reparation for them., !!! If in case if all the private & government doctors will ready to pay compensation for every citizens of Tamil Nadu, no issue for lockdown…. We have already seen ” cholera “, ” Ebola”, ” nifa” ” typhoid”, ” chickun gunia” ” jaundice”, our economic growth is in abyss, this issues are annihilated entire employment opportunities, if it continues it is not good to nation and creates humiliation about India among other abroad countries!!!!???

  3. கொரோனவால் இறப்பவர்களை விட வறுமையால் இறப்பவர்கள் அதிகம் ஆகிவிடும். தயவுசெய்து இதற்கு மேல் ஊரடங்கு வேண்டாம் மக்கள் நலன் கருதி ஊரடங்கு பிறபிக்க வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 😞😞😞

  4. கொரோனவால் இறப்பவர்களை விட வறுமையால் இறப்பவர்கள் அதிகம் ஆகிவிடும். தயவுசெய்து இதற்கு மேல் ஊரடங்கு வேண்டாம் மக்கள் நலன் கருதி ஊரடங்கு பிறபிக்க வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 😞😞😞

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!