தமிழக அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய இது போதும் – அரசின் மாஸ் சலுகை!

0
  தமிழக அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய இது போதும் - அரசின் மாஸ் சலுகை!

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டண சலுகை வழங்கப்பட்டு வழங்கி வரும் நிலையில், தற்போது வெளியிட்ட அறிவிப்பால் அவர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

வெளியான அறிவிப்பு

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் மேம்பட பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி உள்ளது. கல்வியில், வேலையில் இடஒதுக்கீடு, மாதந்தோறும் உதவித்தொகை, பேருந்துகளில் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது  மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் ஏறிய இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் வரை கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். அதற்கு பின் 75% கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மீதி 25% கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும்.

தமிழ்நாடு காவல்துறையில் வேலை வேண்டுமா? – உங்களுக்கான பதிவு தான் இது!

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய வசதியாக புதிய பேருந்துகள் வாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அது தவிர மற்றொரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது பழைய பயண அட்டையை காட்டி பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். இது குறித்து மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!