புதிதாக வீடு கட்ட போறீங்களா? கரண்ட் வாங்க புது ரூல்ஸ் – அரசு சூப்பர் அறிவிப்பு!

0
புதிதாக வீடு கட்ட போறீங்களா? கரண்ட் வாங்க புது ரூல்ஸ் - அரசு சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் புதிதாக வீடு கட்டுவோர் மின் இணைப்பு பெறுவதற்கான விதிகளில் திருத்தம் செய்து இருப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு உத்தரவு

தமிழகத்தில் புதிதாக வீடு கட்டி மின் இணைப்பு பெற அல்லது பழைய கட்டிடத்தை மாற்றி புதுப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆகும். மேலும் அவர்கள் மின் இணைப்பு வாங்க விண்ணப்பபடிவம்-1யை வாங்கி பூர்த்தி செய்து மின் வாரியத்தில் வழங்க வேண்டும். இந்த விண்ணப்பபடிவத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லை. விண்ணப்பபடிவதில் உள்ள சில அடிப்படை தகவல்களுக்கு பதில் அளித்தால் போதும். மேலும் வீட்டின் உரிமையாளர் என்பதற்கான சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் Joint General Manager வேலை – தேர்வு எழுத தேவையில்லை || உடனே விண்ணப்பியுங்கள்!

மேலும் பத்திரப் பதிவுச் சான்றிதழ் போன்ற தேவையான, சட்டரீதியில் செல்லத்தக்க ஆவணங்களை மின்வாரியத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது தற்போது மாற்றப்பட்டுள்ளது. ஒரே கட்டிடத்தில் 3 வீடுகள் இருந்தால் அதற்கு மின்சார இணைப்பு பெறுவதற்கு கட்டிட முடிவு சான்று தேவை என்ற விதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கட்டிட முடிவு சான்று 3 வீடுகள் மற்றும் 750 சதுர மீட்டர் வரை உள்ள கட்டிடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகர பகுதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பயனடைவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!