தமிழக கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழக கல்வித்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற இருக்கிறது. மேலும், எந்தெந்த நாட்கள் விவாதம் நடைபெற இருக்கிறது என்பது தொடர்பான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மானியக்கோரிக்கை விவாதம்:

தமிழக கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம் தொடர்பான முக்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, எந்தெந்த நாட்கள் இந்த விவாதம் நடைபெற இருக்கிறது என்பதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 29 ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை நீர்வளத்துறை, தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை சார்பான விவாதம் நடைபெற இருக்கிறது. மேலும், புதன்கிழமை மாலை உள்துறை, மதுவிலக்கு, ஆயத் தீர்வைத் துறை மற்றும் போக்குவரத்து துறை தொடர்பான விவாதம் நடைபெற இருக்கிறது.

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை – தகுதிகள் என்ன? விரைவில் அரசாணை!

இந்த விவாதத்தினை தொடர்ந்து மார்ச் 30 ஆம் தேதி வியாழக்கிழமை நகராட்சி நிர்வாகம், குடிநீர் வளங்கள் துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தொடர்பான விவாதமும், மார்ச் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை தொடர்பான விவாதமும் நடைபெற இருக்கிறது. இது மட்டுமல்லாமல் ஏப்ரல் 1 ஆம் தேதி சனிக்கிழமை நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள், கட்டிடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல், என்மய சேவை துறை தொடர்பான விவாதமும் நடைபெற இருக்கிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!