உலகளாவிய தமிழர்களின் சிறப்பும், பெருமையும், தமிழ்ப் பணியும்

0

உலகளாவிய தமிழர்களின் சிறப்பும், பெருமையும், தமிழ்ப் பணியும்

 • “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வானோடு முன்தோன்றிய மூத்தகுடி “ என தமிழினத்தின் தொன்மையைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.
 • “திரை கடலோடியும் திரவியம் தேடு” என்றார் ஒளவையார். அதாவது கடல் கடந்து சென்றும் பொருளை ஈட்டு என்பது பொருள்
 • சாதுவன் என்பவன் வாணிகத்தின் பொருட்டுக்கடல் கடந்து சென்றதாக மணிமேகலை கூறுகிறது.
 • காரைக்கால் அம்மையாரின் கணவர் பரமதத்தன் கடல் கடந்து வணிகத்திற்குச் சென்றான் என்று பெரியபுராணம் கூறுகிறது.
 • உலகில் ஐக்கிய நாடுகள் மொத்தம் – 192
 • உலகில் உள்ள மொத்த நாடுகள் – 235
 • 235 நாடுகளில் 144 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
 • 20 நாடுகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள்.
 • இலங்கையில் வாழும் தமிழர்களில் தொண்ணூற்றைந்து விழுக்காட்டினர்
 • தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழிலேயே கல்வி பயில்கின்றனர்.
 • 2000 ஆண்டுகளுக்கு மேலாகவே இலங்கையுடன் தமிழர் தொடர்பு கொண்டிருந்தனர்.
 • இலங்கைத் தமிழர்கள் சைவத்தையும் தமிழையும் இருகண்களாகப் போற்றிக்காத்தனர்.
 • இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழை ஆட்சி மொழியாக்கியுள்ளனர்.
 • சிங்கப்பூர், மொரிசியஸ் நாடுகளில் குடியரசுத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 • சிங்கப்பூர், மலேசியா, பினாங்குதீவு ஆகிய நாடுகளில் ஆண்டுதோறும் திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
 • கோவில் திருவிழாக்களில் காவடி எடுப்பதும், தேர் இழுப்பதும் இன்றும் நடைபெற்று வருகின்றன.
 • இந்தியாவில் மட்டுமில்லாமல் சிங்கப்பூர் (எஸ்.ஆர்.நாதன்) மொரிசியஸ் (வீராசாமி ரிங்காடு) ஆகிய நாடுகளில் குடியரசுத்தலைவர்களாகவும் தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 • அடிமைகளாகவும், கூலிகளாகவும் சென்ற நிலை மாறி “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உள் நோக்கத்துடன் வாழ்கிறார்கள்.
 • தமிழ்நேசன், தமிழ்முரசு, சோலை, திருமுகம், மலைமகள், மாணவர்பூங்கா, மாதவி போன்ற இதழ்கள் மலேசியாவில் தமிழ் வளர்த்தன.
 • உதயதாரகை, ஈழகேசரி, வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு, போன்ற தமிழ் இதழ்கள் இலங்கையில் தமிழ் வளர்த்தன.
  1. மலேசியத் தமிழ்ச் சங்கம்
  2. சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம்
  3. பாரிஸ் தமிழ்ச் சங்கம்
  4. லண்டன் தமிழ்ச் சங்கம்
  5. அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் போன்ற தமிழ்ச் சங்கங்கள் இன்றும் வெளிநாடுகளில் தமிழ்ப்பணி ஆற்றி வருகின்றன.

PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!