தமிழ்த்தாத்தா உ.வே.சா, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி. இலக்குவனார் பற்றிய குறிப்புகள்

0
தமிழ்த்தாத்தா உ.வே.சா, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி. இலக்குவனார் பற்றிய குறிப்புகள்
தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாத ஐயர்
 • தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சா (உத்தமதானபுரம் வேங்கடராம சாமிநாத ஐயர்)  கும்பகோணம் அருகே உள்ள உத்தமதான புரம் எனும் ஊரில் 19.2.1855 அன்று பிறந்தார்.
 • இவரது பெற்றோர் வேங்கட சுப்பையர் மற்றும் சரஸ்வதி அம்மையார்.
 • சாமிநாதய்யரின் இயற்பெயர் வேங்கடராமன்
 • ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
 • ஆசிரியர் வைத்த பெயர் சாமிநாதன்
 • முதலில் பதிப்பித்த காப்பியம் சீவகசிந்தாமணி.

பதிப்பித்த பிற நூல்கள்

 • பத்துப்பாட்டு
 • குறுந்தொகை
 • ஐங்குநுறூறு
 • பதிற்றுப்பத்து
 • பரிபாடல்
 • புறநானூறு
 • சிலப்பதிகாரம்
 • மணிமேகலை
 • பெருங்கதை
 • புறப்பொருள்
 • சிவன்பாமாலை
 • நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரை
 • திருக்காளத்துப் புராணம்
 • திருஆலவாய் உடையார் திருவிளையாடற் புராணம்
 • குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு

எழுதிய உரைநடை நூல்கள்

 • மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்
 • வித்துவான் தியாகராஜ செட்டியார் வரலாறு
 • நான் கண்டதும் கேட்டதும்
 • புதியதும் பழையதும்
 • நினைவு மஞ்சரி
 • சிலப்பதிகாரக் கதைச் சுருக்கம்
 • உதயணன் கதைச் சுருக்கம்
 • புத்த சரிதம்
 • திருக்குறளும் திருவள்ளுவரும்
 • மத்தியார்ச்சுன மான்மியம்
 • நல்லுரைக் கோவை
 • என் சரித்திரம்
 • சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்

பெற்ற பட்டங்கள்

 • தமிழ்த்தாத்தா – தமிழ் அன்பர்கள்
 • மகாமகோபாத்தியாயா – சென்னை அரசாங்கம் 1906
 • உ.வே.சா புகழுக்குக் காரணம் தமிழ் ஓலைச்சுவடிகளை கண்டுபிடித்து ஆராய்ந்து பதிப்பித்தது.
 • “பொதிய மலைப்பிறந்த மொழிவாழ்வுறும் காலம் எல்லாம் புலவர் வாயில் துதி அறிவாய் என்றும் குடந்தை நகர்க் கலைஞர் கோவே” என்றும் உ.வே.சா வைப் பாராட்டியவர் பாரதியார்.
 • ஜி.யு.போப், சூலியல் வின்சோன் முதலிய வெளிநாட்டு அறிஞர்களும் பாராட்டு.
  பல்வேறு இடங்களில் கண்டெடுத்த சுவடிகளைக் கொண்டு சீவகசிந்தாமணியை முழமையாகப் பதிப்பித்தார்.
 • குறிஞ்சிப் பாட்டு சுவடிகளை பதிப்பிக்க முயன்ற போது அதில் குறிப்பிடப்படும் 99 வகையான பூக்களில் மூன்று பூக்களின் பெயர் அச்சுவடியில் தெளிவாக இல்லை. இருந்தாலும் அம்மூன்று பூக்களின் பெயரை அறிவதற்காக பல ஊர்களுக்கு சென்று சுவடிகளைச் சேகரித்து அந்த மூன்று பூக்களின் பெயர்களை அறிந்த பின்பே குறிஞ்சிப் பாட்டைப் பதிப்பித்தார்.
 • ஆங்கிலேயர் காலத்தில் அளிக்கப்பட்ட முதலும் கடைசியுமான “டாக்டர்” பட்டம் இவருக்கானது என்பர்.
 • உ.வே.சா அவர்களின் பெயரால் 1942 ல் நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா நூல் நிலையம் இன்றும் சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் செயல்பட்டு வருகிறது.
 • நடுவண் அரசு உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்து உள்ளது.
 • உ.வே.சா. 28.4.1942 அன்று இயற்கை எய்தினார்.
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
 • பிறப்பு : 8.1.1901
 • சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் பிறந்தார்.
 • தந்தை பொன்னுசாமி கிராமணி
 • 1920 ல் பி.ஏ
 • 1922 ல் பி.எல்
 • 1924 ல் எம்.ஏ (வரலாறு) பெற்றார்.
 • மேலும் எம்.ஓ.எல் பட்டம் பெற்றார்.
 • தமிழ்வித்துவான் தேர்வுக்குரிய முன்னிலைத்தேர்வு, இறுதித்தேர்வு, இரண்டையும் ஒருசேர எழுதி மாநிலத்தில் முதல்நிலையில் வெற்றி பெற்றார்.
 • 1923 ல் சென்னை உயர்நீதிமன்ற வழங்கறிஞரானார்.
 • நாட்டுவிடுதலைக்காகப் போராடி 1944 ல் சிறை சென்றார்.
 • 1916 ல் அரிஜனங்களுக்கு இரவுப் பள்ளிக் கூடம் நடத்தினார்.
 • 1925 அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவர்
 • 1936 வேதாந்த சங்கத் தலைவர்
 • 1947 மாண்டிசேரி பள்ளியை நிறுவினார்.
 • 1944 – 1946 அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் பேராசிரியர்.
 • 1958 ல் துறைத் தலைவர்
 • மொழியியல் துறையை மொழியியல் உயராய்வு மையமாக மாற்றினார்.
 • 1961 சிகாகோ பல்கலைக் கழகத்தில் தமிழ்க் கல்வி தொடங்கிய போது அங்குத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
 • 1973-74 திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியின் சிறப்பாய்வாளராகப் பணியாற்றினார்.
 • 1967 மதுரைப் பல்கலைக்கழகம்
 • 1976 இலங்கைப் பல்கலைக்கழகம்
 • 1979 அண்ணாமலைக் கழகம் டி.லிட். பட்டம் பெற்றார்.

பெற்ற பட்டங்கள்

 • பல்கலைச் செல்வர் – திருவாடுதுறை ஆதினம்
 • பன்மொழிப் புலவர் – குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம்
  (அழகப்பச் செட்டியார் தலைமை)
 • பெருந்தமிழ் மணி – சிவபுரி சன்மார்க்க சபை
  (முதலமைச்சர் காமராசர் தலைமை)
 • அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தைத் தொடங்கியவர்.
 • தமிழ் மொழியியல் கழகத்தில் முதல் தலைவர் தன் இறுதி காலம் வரை அதன் தலைவராக இருந்தார்.

புகழ்

 • நடமாடும் பல்கலைக் கழகம் – திரு.வி.க
 • பன்மொழிப் புலவர் (தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன்)

தமிழ் நூல்கள்

வள்ளுவரும் மகளிரும், அன்பு மூடி, கால்டுவெல் ஒப்பிலக்கணம், அச்சொற்கள் (மொழி பெயர்ப்பு). மனோ தத்துவ சாத்திரம், தமிழா நினைத்துப் பார், நீங்களும் சுவையுங்கள், வள்ளுவர் கண்ட நாடும் காமமும், பிறந்தது எப்படியோ? கானல்வரி, சமணத் தமிழ், இலக்கிய வரலாறு, கல்விச் சிந்தனைகள், தமிழ் மணம், தமிழும் பிற பண்பாடும், வாழும் கலை, தமிழ்மொழி வரலாறு, மொழியியல் விளையாட்டுகள், பத்துப்பாட்டு ஆய்வு.

சி. இலக்குவனார்
 • பிறப்பு 10.03.1910
 • தஞ்சை திருத்துறைப்பூண்டியை அடுத்த வாய்மை மேடு என்ற இடத்தில் பிறந்தார்.
 • பெற்றோர் : சிங்காரவேலுத் தேவர் இரத்தினம் அம்மாள்
 • இலட்சுமணன் என்ற பெயரை சாமி சிதம்பரனார் இலக்குவணன் என மாற்றினார்.
 • 1936 ல் தமிழ் வித்துவான் பட்டம் பெற்றார்.
 • பி.ஓ.எல், எம்.ஓ.எல், எம்.ஏ பட்டம் பெற்றார்.
 • 1936 – 1943 வரை பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
 • 1945 – 1965 வரை தெ.தி அந்துக் கல்லூரி, விருதை செந்தில் குமார நாடார் கல்லூரி,மதுரை தியாகராசர் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
 • 1962 ல் தமிழ்ப் பாதுகாப்புக் கழகத்தை தொடங்கினார்.
 • 1965 ல் இந்தி எதிர்ப்பில் கலந்து கொண்டு கைதானார்.
 • சிறை சென்று விடுதலை ஆனார்.
 • 1967 ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன்
 • 1967-1968 மாநிலக் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்.
 • 1968 – 70 களில் உஸ்மேனியா பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர்
 • தொல்காப்பியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
 • “தொல்காப்பியன்” என்ற புனைப்பெயர் கொண்டவர்.
 • தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அது குறித்து ஆங்கிலத்தில் ஆராய்ச்சி கட்டுரை எழுதியுள்ளார்.

நூல்கள்

 • எழிலரசி, மாணவர் ஆற்றுப்படை, அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து, அமைச்சர் யார்? எல்லோரும் இந்நாட்டு அரசர், தமிழ் கற்பிக்கும் முறை, வள்ளுவர் வகுத்த அரசியல், வள்ளுவர் கண்ட இல்லறம், பழந்தமிழ், தொல்காப்பிய ஆராய்ச்சி விளக்கம் இலக்கியம், கூறும் தமிழர் வாழ்வியல், கருமவீரர் காமராசர்.
 • என் வாழ்க்கை போர் என்பது இவரின் தன் வரலாற்று நூல் இவரிடம் பயின்ற மாணவர்களில் கலைஞர் மு.கருணாநிதியும் ஒருவர்.
 • இலக்கண செம்மல், செந்தமிழ் மாமணி என்றெல்லாம் பாராட்டப்பட்ட இவர் 3.9.1973 அன்று இயற்கை எய்தினார்.

PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!