தமிழகத்தில் ஜூலை 31 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் ஜூலை 31 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஜூலை 31 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஜூலை 31 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று மற்றும்‌ வெப்பச் சலனம்‌ காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று சேலம்‌, கோவை, நீலகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்கள்‌, உள்‌ மாவட்டங்கள்‌, வடக்கு கடலோர மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌, கன்னியாகுமரி மாவட்டம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

28.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்கள்‌, வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

நடிகர் விஜயின் சொகுசு கார் வழக்கு அபராதத்துக்கு இடைக்கால தடை – காரசார விவாதம்!

29.07.2021 முதல்‌ 31.07.2021 வரை: கோவை, நீலகிரி மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ அதனை ஓட்டிய உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடனும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல்‌ பகுதிகள்‌:

27.07.2021: தமிழ்நாடு – ஆந்திர கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன்‌ செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

27.07.2021: வட கிழக்கு வங்க கடல்‌, மத்திய கிழக்கு வங்க கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

TN Job “FB  Group” Join Now

28.07.2021: மத்திய வங்க கடல்‌, வடக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

29.07.2021: மத்திய வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

29.07.2021 முதல்‌ 31.07.2021 வரை: கர்நாடக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

27.07.2021 முதல்‌ 31.07.2021 வரை: தென்‌ மேற்கு, வடக்கு மற்றும்‌ மத்திய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!