தமிழகத்தில் ஜூலை 16 வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் ஜூலை 16 வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் ஜூலை 16 வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் ஜூலை 16 வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வடக்கு ஆந்திரா மற்றும்‌ தெற்கு ஒடிசா ஒட்டிய கடற்பகுதிகளில்‌ நிலவுகிறது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்‌

12.07.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

13.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிதமான மழையும்‌, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

14.07.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌ (தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிதமான மழையும்‌, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேகமாக வறண்ட வானிலையே நிலவக்‌ கூடும்‌.

15.07.2021, 16.07.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இலேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல்‌ பகுதிகள்‌:

12.07.2021: தெற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 500 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

12.07.2021, 13.07.2021: மத்‌இய மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய ஆந்திர கடற்‌பகுஇதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

TN Job “FB  Group” Join Now

மீனவர்கள்‌ மேற்குறிப்பிட்ட தேதிகளில்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

12.07.2021: மத்திய இழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

12.07.2021 முதல்‌ 14.07.2021 வரை: கேரளா, லட்சத்‌தீவு மற்றும்‌ அதனை ஓட்டிய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 65 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

15.07.2021 முதல்‌ 16.07.2021 வரை: கேரளா, லட்சத்‌தவு மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

12.07.2021 முதல்‌ 16.07.2021 வரை: கர்நாடக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

12.07.2021 முதல்‌ 16.07.2021 வரை: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ மேற்குறிப்பிட்ட தேதிகளில்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!