அரசு ஊழியர்களுக்கு TA உயர்வு – ஒரே நேரத்தில் பல சலுகைகள்!

0
அரசு ஊழியர்களுக்கு TA உயர்வு - ஒரே நேரத்தில் பல சலுகைகள்!
அரசு ஊழியர்களுக்கு TA உயர்வு - ஒரே நேரத்தில் பல சலுகைகள்!
அரசு ஊழியர்களுக்கு TA உயர்வு – ஒரே நேரத்தில் பல சலுகைகள்!

பயணப்படி முதல் இறப்பு நிவாரணம் வரை..ஒரே நேரத்தில் பல சலுகைகள் – அரசு ஊழியர்களுக்கு நல்ல காலம் தான்!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு அதிரடியாக பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், குறிப்பிட்ட மாநிலத்தில் அரசு பயணப்படி முதல் இறப்பு நிவாரணம் வரை பல சலுகைகளை ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பு:

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் அரசு ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளார். அரசு உத்தரவின்படி அரசு ஊழியர்களுக்கு இந்த உயர்த்தப்பட்ட ஊதியம் ஆனது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்வையற்றவர்கள் செவிதிறன் குறைபாடு உடையவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கான போக்குவரத்து படியானது ரூ. 2000 தற்போது ரூ. 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் அரசு ஊழியர்களுக்கான வீடு கட்டும் முன்பணம் ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம் ஆகவும், கார் வாங்குவதற்கான முன்பணம் ரூ. 6லட்சத்திலிருந்து ரூ.9 லட்சம் ஆகவும், இருசக்கர வாகனங்களுக்கான முன்பணம் ரூ. 80,000ல் இருந்து ஒரு லட்சமாகவும், பெண் குழந்தைகளுக்கான திருமணம் முன்பணம் ஒரு லட்சத்திலிருந்து ரூ.4 லட்சம் வரையிலும், ஆண் குழந்தைகளுக்கு ரூ. 75 ஆயிரம் முதல் ரூபாய் மூன்று லட்சம் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப்பிரிவில் மாற்றம் – முதல்வர் உத்தரவு!

மேலும் ஓய்வூதியம் பெறுபவர்கள் இறப்பு நிவாரண தொகையானது ரூ. 20000 ல் இருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு 15% சிறப்பு ஊதியம் வழங்கப்படும். மாநில பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 30 சதவீதம் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!