வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கேள்வி – தேர்தல் ஆணையம் விளக்கம்!!

0
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கேள்வி - தேர்தல் ஆணையம் விளக்கம்!!
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கேள்வி - தேர்தல் ஆணையம் விளக்கம்!!
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கேள்வி – தேர்தல் ஆணையம் விளக்கம்!!

உச்ச நீதிமன்றத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவது குறித்து மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை கோரியுள்ளது.

வாக்காளர் பட்டியல்:

நாடு முழுவதும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெறும் சட்டமன்ற, உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் தான் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படுவது குறித்து உச்ச நீதி மன்றத்தில் எம்.ஜி.தேவசகாயம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டு, வாக்குரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

Post Office: 5 வகையான சேமிப்பு திட்டங்களின் முழு விவரம் – ரூ.100 முதல் டெபாசிட் செய்யலாம்!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் படி, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் உள்ள போதிலும், இதற்காக உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வாக்காளர்களின் விருப்பம் கேட்கப்பட வேண்டும் என்றும், வாக்காளர் அனுமதி இல்லாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க அவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!