மக்களிடம் பொறுமை, சகிப்புத்தன்மை குறைவு – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து!

0
மக்களிடம் பொறுமை, சகிப்புத்தன்மை குறைவு - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து!
மக்களிடம் பொறுமை, சகிப்புத்தன்மை குறைவு – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இன்றைக்கு மக்களிடையே பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை வெகுவாக குறைந்து விட்டது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிபதி உரை:

சர்வதேச மயமாக்கல் காலத்தில் சட்டம் பற்றிய நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் காலத்திற்கேற்ற சட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அட்ராசக்க…ஆன்லைனில் இளங்கலை & முதுகலை பட்டப்படிப்புகள் – முழு விவரம் உள்ளே!

அப்போது பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தற்போது மக்களிடையே பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை போன்ற குணங்கள் குறைந்து விட்டதாக கூறினார். மேலும் இன்றைக்கு சமூக ஊடங்களிலும் மக்கள் கேலி கிண்டலுக்கு ஆளாகின்றனர். அண்மையில் ட்விட்டர் தளத்தில் இது போன்ற பிரச்சனைகள் அதிகரித்ததை சுட்டிக்காட்டினார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இத்தகைய நிகழ்வுகள் சில நேரங்களில் பேராபத்திற்கு வழி வகுக்கிறது என்றும் கூறினார். மேலும் சமூக வலைத்தளங்களில் தனிநபர்கள் மீது மட்டுமல்ல நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் நீதிபதிகள் குறித்தும் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 2017ம் ஆண்டு சமூக வலைதங்களில் ஒழுங்குமுறை தேவை என ஒப்புக்கொள்ளப்பட்டது என்றும் கூறினார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!