சன் டிவி “தாலாட்டு” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சர்ச்சை நடிகர் – வெளியான புகைப்படம்!

0
சன் டிவி
சன் டிவி "தாலாட்டு" சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சர்ச்சை நடிகர் - வெளியான புகைப்படம்!
சன் டிவி “தாலாட்டு” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சர்ச்சை நடிகர் – வெளியான புகைப்படம்!

சன் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த “தாலாட்டு” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நாதன் சியாம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் சிறப்பு ரோலில் களமிறங்க இருக்கும் நடிகர் நடிகைகள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

தாலாட்டு சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி சீரியல்கள் என்றாலே அதில் புதுமையான கன்டென்ட் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் ஒவ்வொரு சீரியலிலும் திருப்பங்களை கொண்டு வர ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரு மணி நேரம் சீரியல் ஒளிபரப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தாலாட்டு சீரியலில் ஒரு மணி நேரம் சிறப்பு தொகுப்பு நாளை ஒளிபரப்பாக இருக்கிறது. அதில் இசையின் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வர இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

அந்த கதாபாத்திரங்களில் நடிகர் ஈஸ்வர் மற்றும் லாவண்யா நடிக்க இருக்கின்றனர். இருவரும் ஜோடியாக தற்போது அருவி சீரியலில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே ஈஸ்வர் மஹாலக்ஷ்மி உடன் காதலில் இருந்ததாக கிசு கிசு வந்துள்ளது. அதன் பின் அவர் தற்போது இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். மேலும் இந்த சீரியலில் நடிகை சுனிதா மற்றும் நாதன் ஷியாம் என்ட்ரி கொடுத்து இருந்தனர்.

என்ன இவங்களும் சீரியலுக்கு வந்துட்டாங்க.. சிறப்பு தோற்றத்தில் பிக் பாஸ் வெற்றியாளர் – வைரல் ப்ரோமோ!

Follow our Instagram for more Latest Updates

அவர்கள் இசையின் தோழி குடும்பம் போல காட்டப்பட்டது. ஆனால் தற்போது நாதன் ஷியாம் சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நடிகர் அஸ்வின் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே நடிகை சுனிதா மற்றும் அஸ்வின், சந்திரலேகா சீரியலில் நடித்து இருக்கின்றனர். அதனால் நாளை நடைபெற இருக்கும் சிறப்பு 1 மணி தொகுப்பில் ஏகப்பட்ட திருப்பங்கள் வர இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!