EPFO தொகையை அறிந்து கொள்ளும் எளிய வழிமுறைகள் – முழு விபரம் இதோ!!

0
EPFO தொகையை அறிந்து கொள்ளும் எளிய வழிமுறைகள் - முழு விபரம் இதோ!!
EPFO தொகையை அறிந்து கொள்ளும் எளிய வழிமுறைகள் - முழு விபரம் இதோ!!
EPFO தொகையை அறிந்து கொள்ளும் எளிய வழிமுறைகள் – முழு விபரம் இதோ!!

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (EPFO) திட்டத்தின் கீழ் சேமித்து வைக்கப்பட்ட பண தொகையை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி உங்கள் இருப்பு தொகையினை அறிந்து கொள்ளலாம்.

EPFO தொகை இருப்பு:

தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களின் வருங்கால தேவைக்காக வைப்பு நிதி திட்டத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஒரு தொழிலாளர் தங்களது வருங்காலத்திற்கான பணத்தை சேமிக்க முடியும், தவிர இந்த EPFO மூலம் ஒருவர் கடன் தொகையையும் பெற்றுக்கொள்ள முடியும்.

TN Job “FB  Group” Join Now

வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான வைப்பு நிதி எண் (UAN) கொடுக்கப்பட்டிருக்கும். இதை பயன்படுத்தி உங்களது வைப்பு நிதி கணக்கில், எவ்வளவு தொகை உள்ளது என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

மிஸ்ட் கால் மூலம் தெரிந்து கொள்ள,

EPFO திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட உங்கள் தொலைபேசி எண்ணிலிருந்து, 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுக்கவும்.
பின்னர் உதவி மையத்திலிருந்து உங்களுக்கு போன் செய்யப்படும்.
அவர்களிடம் உங்களது வைப்பு நிதி நிலுவைத் தொகை குறித்து விசாரிக்கலாம்.

எஸ்.எம்.எஸ் மூலம் தெரிந்து கொள்ள,

EPFO திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து, 7738299899 என்ற எண்ணுக்கு, EPFOHO UAN என எம்எம்எஸ் அனுப்புவதன் மூலம் தகவல்களை பெறலாம்.

உமாங் செயலி மூலம் தெரிந்து கொள்ள,
  • உமாங் (Umang app) செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
  • செயலியில் EPFO ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  • பிறகு தொழிலாளர் சேவைக்கான பிரிவை கிளிக் செய்யவும்.
  • அதில் EPF இருப்பை தெரிந்துக் கொள்ள, View Passbook ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • பிறகு UAN எண்ணை பதிவு செய்து, UAN இல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்ப Get OTP என்பதை கிளிக் செய்யவும்.
  • OTP யை பதிவிட்டு உள்நுழை என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • அதில் EPF இருப்பை சரிபார்க்க, உங்கள் நிறுவனத்தின் உறுப்பினர் ஐடியை தேர்ந்தெடுக்கவும்.
  • கடைசியாக, உங்கள் பாஸ்புக் EPF நிலுவைத் தொகையுடன் திரையில் தெரியும்.
EPFO Portal யை பயன்படுத்தி தெரிந்து கொள்ள,
  • http://www.epfindia.gov.in என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
  • அதில் சேவைகள் எனும் பிரிவில், தொழிலாளர்கள் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • பிறகு உறுப்பினர் கணக்கு எண் என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் உங்கள் UAN மற்றும் PASSWORD கொடுத்து உள்நுழையவும்.
  • பிறகு உங்கள் EPF கணக்கை தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!