தமிழில் ஆதார் அட்டை ஆன்லைனில் பெறுவது எப்படி? முழு விபரம் இதோ!

0
தமிழில் ஆதார் அட்டை ஆன்லைனில் பெறுவது எப்படி? முழு விபரம் இதோ!
தமிழில் ஆதார் அட்டை ஆன்லைனில் பெறுவது எப்படி? முழு விபரம் இதோ!
தமிழில் ஆதார் அட்டை ஆன்லைனில் பெறுவது எப்படி? முழு விபரம் இதோ!

இந்திய குடிமக்களின் ஒரு அத்தியாவசிய ஆவணமான ஆதார் அட்டையை உங்களது பிராந்திய மொழிகளில் பெறும் வாய்ப்பை UIDAI நிறுவனம் வழங்குகிறது. இது குறித்த முழு விவரம் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஆதார் அட்டை:

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் முக்கிய ஆதாரமாக ஆதார் அட்டை உள்ளது. ஆதார் அட்டை என்பது UIDAI நிறுவனம் மூலமாக வழங்கப்படும் தனிமனித அடையாள அட்டை ஆகும். இதில் தனிப்பட்ட 12 இலக்க எண் உள்ளது. தற்போது வங்கி கணக்கு தொடங்குவதில் இருந்து குழந்தைகளுக்கு பள்ளி சேர்க்கைக்கு கூட இந்த ஆதார் அட்டை முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? தேமுதிக தலைவர் முக்கிய தகவல்!

இந்த முக்கிய ஆவணமான ஆதார் அட்டை அனைத்து மாநிலங்களிலும் பொருந்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலும் ஆங்கில மொழிகளில் இந்த அட்டை வழங்கப்படுகிறது. ஆனால் உங்களது விருப்பத்தின் படி, பிராந்திய மொழியில் ஆதார் அட்டையை உருவாக்கும் வசதியையும் யுஐடிஏ (UIDAI) வழங்குகிறது. அதன்படி, ஆங்கிலம், அசாமி, உருது, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, ஒரியா, கன்னடம், மலையாளம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் ஆதார் அட்டை பெறலாம்.

பிராந்திய மொழிகளில் ஆதார் பெற:

  • முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://uidai.gov.in/ க்குச் செல்ல வேண்டும்.
  • அதில் Update Aadhaar’ பிரிவின் கீழ், புள்ளிவிவர தரவை ஆன்லைனில் புதிப்பிப்பதற்கான இடத்தில் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது நீங்கள் ‘Aadhaar Self Service Update Portal’ ஓபன் செய்யப்படும்.
  • இப்போது இந்த பக்கத்தில், உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு, கேப்ட்சா பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்டு ‘send OTP’- ஐக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் 6 இலக்க ஒரு முறை கடவுச்சொல் வரும்.
  • இதன் பிறகு OTP ஐ உள்ளிட்டு செய்து லாக் இன் பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்த திரை வரும். அதில் புள்ளிவிவர தரவு புதுப்பிப்பு பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அதன் அடுத்த பக்கத்தில் அனைத்து மக்கள்தொகை தரவுகளின் விவரங்களும் இருக்கும். இப்போது உங்கள் பிராந்திய மொழியைத் தேர்ந்தெடுக்கவும். பெயர் மற்றும் முகவரி தானாக தேர்ந்தெடுக்கப்படும்.
  • அதன் பின்னர் கேட்கப்பட்ட விவரங்களை கொடுத்து உங்களது விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். உங்கள் பெயர் ஏற்கனவே உள்ளூர் மொழியில் சரியாக எழுதப்பட்டிருந்தால், நீங்கள் இங்கு அதிக திருத்தம் செய்ய வேண்டி இருக்காது.
  • இறுதியாக இதற்கு உங்கள் டெபிட் / கிரெடிட் கார்டு அல்லது இணைய வங்கியைப் பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்தலாம். இதற்குப் பிறகு, உங்கள் ஆதாரில் புதிய மொழி புதுப்பிப்புக்கான கோரிக்கை சமர்ப்பிக்கப்படும். இதன் பிறகு புதிய ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும்.
  • ஆதார் அட்டையில் மொழியைப் புதுப்பிக்க 1 முதல் 3 வாரங்கள் வரை ஆகலாம். அல்லது ஆதார் சேவை மையத்தின் மூலம் உங்கள் மொழியை ஆதாரில் மாற்றிக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!