தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

ரேஷன் கடைகள் மூலம் சாமானிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்த விபரங்களை இப்பதிவில் காணலாம்.

ரேஷன் கார்டு:

தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் வீட்டில் இருந்தபடியே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். ரேஷன் கார்டு புதிதாக வாங்க அரசு அலுவலகத்துக்கு சென்று அலையும் நிலை தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக குறைந்துள்ளது. அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை பெற்றுக்கொள்ள ரேஷன் கார்டு கட்டாயமான ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு முதலியன வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு ரேஷன் கார்டுகள் கட்டாயமானதாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக வீடு கட்டுவோர் கவனத்திற்கு – சிமெண்ட் விலை ரூ.120 அதிகரிப்பு!

ரேஷன் கார்டில் உள்ள தகவலின்படி வருமானத்தின் அடிப்படையில் அந்த அட்டைக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகிறது. தற்போது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது போன்ற அனைத்து ஆன்லைன் மூலம் செய்து கொள்ள முடியும். ரேஷன் அட்டை பெற விண்ணப்பிப்பதற்கு ஆதார் அட்டை, மொபைல் எண், குடும்ப உறுப்பினர்களின் பாஸ்போர்ட் அளவு போட்டோ, பான் கார்டு, மின்சார கட்டணம், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், வாங்கி பி-ஆஸ் புக் மற்றும் சிலிண்டர் இணைப்பு விவரங்கள் முதலியன கட்டாயமான ஒன்றாகியுள்ளது.

  • BPL – இது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது.
  • APL – வறுமைக் கோட்டுக்கு மேல் மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.
  • AAY – இந்த ரேஷன் கார்டு அந்தியோதயா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது மற்றும் மற்ற வர்க்க மக்களை விட பொருளாதாரத்தில் பலவீனமானவர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • AY – அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் மக்களுக்கு இந்த ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது மேலும் ஒவ்வொரு மாதமும் 10 கிலோ அரிசி விலை இல்லாமல் வழங்கப்படுகிறது. நபர் 65 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் மற்றும் எந்த வருமான ஆதாரமும் இருக்க கூடாது.

புதிய ரேஷன் கார்டு பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பின் Food Security பிரிவுக்கு செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்த பின்னர் SUBMIT என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து ரேஷன் கார்டு எண் வழங்கப்படும்.

பதிவிறக்கம் செய்வது எப்படி?

உணவுத்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று Citizen Corner என்பதை கிளிக் செய்த பின்பு Generate e-Cardஐ கிளிக் செய்ய வேண்டும். ரேஷன் கார்டு விவரங்கள், ஆதார் எண் (வீட்டுத் தலைவர்) / NFS ID, குடும்பத் தலைவரின் பெயர் மற்றும் வயது, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை அதில் கொடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து SUBMIT என்பதை கிளிக் செய்வதன் மூலம் இ-ரேஷன் திரையில் தெரியும். அதனை தொடர்ந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!