அடுத்தாண்டு குடியரசு தின விழாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு அணிவகுப்பு – அரசு திட்டம்!

0
அடுத்தாண்டு குடியரசு தின விழாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு அணிவகுப்பு - அரசு திட்டம்!
அடுத்தாண்டு குடியரசு தின விழாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு அணிவகுப்பு - அரசு திட்டம்!
அடுத்தாண்டு குடியரசு தின விழாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பு அணிவகுப்பு – அரசு திட்டம்!

அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் சிறப்பான ராணுவ படை அணிவகுப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு அறிவித்துள்ளது.

குடியரசு தின அணிவகுப்பு:

இந்தியாவில் குடியரசு தின விழா அணிவகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் ராணுவப்படை பிரிவுகளில் அதிகாரிகள் அந்தஸ்தில் இருக்கும் பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இந்தாண்டும் குடியரசு தின விழா அணிவகுப்பு டெல்லியில் நடைபெற்ற போது அதிகாரிகள் அந்தஸ்தில் உள்ள ராணுவப் படை பிரிவு பெண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதன் பின்னர் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் அடங்கிய ராணுவ படைப்பிரிவுகள், பேண்ட் இசை குழுவினர் அணி வகுப்பு கலந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் என ஆலோசனை செய்யப்பட்டது.

TNPSC Road Inspector விடைக்குறிப்பு 2023 – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்!

அதன்படி, தற்போது ராணுவ போலீஸ் படை பிரிவில் 100 பெண்களும், கடற்படை அக்னி பாதை திட்டத்தின் கீழ் 273 பெண்களும் மாலுமிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் பெண்களை பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மாநிலங்கள் மற்றும் அரசு துறைகள் சார்ந்து இடம்பெறும் முக்கிய நிகழ்வுகள், அலங்கார ஊர்திகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளிலும் முற்றிலுமாக பெண்களை பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!