சென்னை சென்ட்ரல் -மதுரை ரயில் சேவை ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் தலைநகர் சென்னையில் இருந்து பல மாவட்டங்களில் ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் – மதுரை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் மற்றும் மதுரை இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்கள் ரத்து:
சென்னை மாநகரில் தினமும் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர். அவர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு ஏகப்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் குளறுபடி – மின்வாரியம் அதிரடி உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
அதன் படி சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் -மதுரை (வண்டி எண்: 20601) இடையே இரவு 10.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் மற்றும் மதுரை இடையே இன்று (திங்கட்கிழமை) பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மதுரை-எம்.ஜி.ஆர். சென்ட்ரல் (20602) இடையே இரவு 10.50 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை மற்றும் திண்டுக்கல் இடையே நாளை (செவ்வாய்க்கிழமை) பகுதியாக ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.