வாட்ஸ்ஆப்பில் டெலிட் ஆன செய்திகளை எவ்வாறு பார்ப்பது? எளிய வழிமுறைகள் இதோ!

0
வாட்ஸ்ஆப்பில் டெலிட் ஆன செய்திகளை எவ்வாறு பார்ப்பது? எளிய வழிமுறைகள் இதோ!
வாட்ஸ்ஆப்பில் டெலிட் ஆன செய்திகளை எவ்வாறு பார்ப்பது? எளிய வழிமுறைகள் இதோ!
வாட்ஸ்ஆப்பில் டெலிட் ஆன செய்திகளை எவ்வாறு பார்ப்பது? எளிய வழிமுறைகள் இதோ!

நமது வாட்ஸ்அப் செயலியில் நமக்கு அனுப்பிய செய்திகளை ஒருவர் நீக்கிவிட்டால், அதனை எவ்வாறு பார்ப்பது என்பது பற்றிய விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செய்திகள்:

வாட்ஸ்அப் செயலி பல புதிய அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது, இதனால் இந்த செயலியின் பயனர்கள் நல்ல அனுபவத்தை பெறுகின்றனர். அந்த வகையில், நாம் அனுப்பிய செய்தியை நீக்கும் அம்சம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அம்சத்தின் மூலம் நாம் தவறாக அனுப்பிய செய்திகளை அளித்துக் கொள்ளலாம். தனி நபர் மற்றும் குழுவின் கணக்குகளிலும் செய்யும் வசதி உள்ளது. இருப்பினும், நாம் செய்தியை அனுப்பிய 13 மணிநேரம், 8 நிமிடங்கள் மற்றும் 16 வினாடிகள் என்ற கால அளவிற்குள் மட்டுமே இந்த வசதியை செயல்படுத்த முடியும்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 3 கடைசி நாள்!!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி உள்ளது. iOS பயனர்களுக்கு இந்த வசதி இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. நீக்கப்பட்ட செய்திகளை நாம் வேறு ஒரு செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்த செயலி நமது தொலைபேசியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். நமது வாட்ஸ்ஆப் செயலி பயன்பாட்டில் இருக்கும் பொது மட்டுமே நீக்கப்பட்ட செய்திகள் பதிவாகும்.

நீக்கப்பட்ட செய்திகளை படிக்க உதவும் வழிமுறைகள்:
  • முதலில் பிளே ஸ்டோரில் உள்ள ‘ Notisave’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • இந்த செயலியில் Notification History என்ற அம்சம் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
  • அறிவிப்புகள், புகைப்படங்கள், கோப்புகள் மற்றும் மீடியா போன்றவற்றைப் படிக்க பயன்பாட்டிற்கு அனைத்து அனுமதிகளையும் வழங்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • இப்போது, பயன்பாடு வாட்ஸ்அப் செய்திகள் உள்ளிட்ட அனைத்து அறிவிப்புகளையும் கண்காணிக்க அனுமதி அளிக்க வேண்டும்.
  • இதன் மூலம் நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை நோடிசேவ் பயன்பாட்டில் நாம் படிக்க முடியும்.
  • இந்த முக்கிய அம்சமானது அண்ட்ராய்டு 11ல் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் வேறு செயலியின் உதவி இல்லாமலே பெரும் வசதியை கொண்டுள்ளது.
  • Android 11 உள்ள மொபைல்களில் notification history பயன்பாட்டை இயக்குவதால் மூலம் இந்த வசதிகளை எளிதாக பயன்படுத்தலாம்.
Android 11 தொலைபேசியில் நீக்கிய செய்திகளை படிக்கும் முறை:
  • உங்கள் தொலைபேசியில் Settings பகுதிக்கு சென்று Apps and Notification பகுதிக்கு செல்ல வேண்டும்.
  • இப்பொழுது Notification என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில் History என்பதை கிளிக் செய்து, ‘Use Notification History’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது நீங்கள் நீக்கப்பட்ட செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!