தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – பொங்கல் பரிசில் ரொக்கப்பணம்?

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு - பொங்கல் பரிசில் ரொக்கப்பணம்?
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு - பொங்கல் பரிசில் ரொக்கப்பணம்?
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – பொங்கல் பரிசில் ரொக்கப்பணம்?

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பொங்கல் தொகுப்பு உடன் ரொக்கம் வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொங்கல் தொகுப்பு:

தமிழ் பேசும் மக்களால் பொங்கல் திருவிழா பெரும் விமர்சையாக கொண்டாடப்படும். அன்று மக்கள் அனைவரும் குடும்பத்தாருடன் இணைந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். இந்நிலையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் பொங்கல் வைக்க தேவையான பொருள்கள் வழங்கப்படும். இந்த ஆண்டும் 21 பொருள்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்க இருப்பதாக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா, உண்மையை உணரும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்படும். சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு இந்த தொகுப்பு வழங்க இருக்கிறது.

அம்மன் அவதாரம் எடுத்த ‘பிக் பாஸ்’ புகழ் நமீதா மாரிமுத்து – பரவசத்தில் பக்தர்கள்!

இந்த தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக வருகிற ஜனவரி 4 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். இந்த தொகுப்பு தெருவாரியாக சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. தற்போது இந்த தொகுப்பு பெற பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகத்தால் பொது மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!