SC மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டுக்கான உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

4
SC மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டுக்கான உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
SC மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டுக்கான உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
SC மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டுக்கான உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி 63 லட்சம் மெட்ரிக் பிந்தைய கல்வி உதவித்தொகைகள் வழங்க விண்ணப்பங்கள் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை:

இந்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தேசிய அளவிற்கு இணையாக SC மாணவர்களின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதத்தை (உயர்கல்வித் துறையில் ) உயர்த்த 2021-22 ஆம் ஆண்டில் பட்டியலின மாணவர்களுக்கு 63 லட்சம் மெட்ரிக் பிந்தைய கல்வி உதவித் தொகைகள் வழங்கவிருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

ssc

தகுதி:

ஆண்டிற்கு ரூ.2.5 லட்சத்திற்கு குறைவாக வருமானம் பெறும் பெற்றோரை உடைய SC பிரிவை சேர்ந்த மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் XI வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

பயன்கள்:

  • படிக்கும் காலம் முழுமைக்கும் இந்த உதவித்தொகை பின்வரும் பயன்களை உள்ளடக்கியுள்ளது.
  • கல்வி கட்டணம் உட்படகட்டாயமாக திருப்பி தரத்தகாத கட்டணங்கள்.
  • படிக்கும் வகுப்பை பொறுத்து ஆண்டுக்கு 2500 முதல் 13500 வரை கல்வி படிகள்.
  • திவ்யாங் (மாற்று திறனாளி) மாணவர்களுக்கு பத்து சதவிகிதம் கூடுதல் படிகள் வழங்கப்படும்.
  • கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணங்களை முன்கூட்டியே செலுத்தாமல் அனைத்து தகுதி வாய்ந்த மாணவர்களும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
  • தகுதியுள்ள மாணவர்களுக்கு கட்டணங்களை முன்கூட்டியே செலுத்தாமல் கல்வி நிறுவனத்தில் படிக்க உதவும் வகையில் மாநில அரசுகளால் ஒரு இலவச அட்டை வழங்கப்படும்.

குடும்பங்களுக்கு ரூ.5000 கொரோனா நிவாரண நிதி – இலங்கை அரசு அறிவிப்பு!

விண்ணப்பங்கள்:

தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களும் முதல் அழைப்பில் ஏப்ரல் 16 முதல் ஜூன் 30,2021 வரை கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் மாநில அரசின் குறைதீர்க்கும் எண்ணை அழைக்கவும், அல்லது மாநில அரசின் சமூக நல ஆணையரை அணுகவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!