SBI வங்கி வேலைவாய்ப்பு 2021 – நுழைவுச் சீட்டு வெளியீடு! நவம்பர் 20 முதல் தேர்வு!

0
SBI வங்கி வேலைவாய்ப்பு 2021 - நுழைவுச் சீட்டு வெளியீடு! நவம்பர் 20 முதல் தேர்வு!
SBI வங்கி வேலைவாய்ப்பு 2021 - நுழைவுச் சீட்டு வெளியீடு! நவம்பர் 20 முதல் தேர்வு!
SBI வங்கி வேலைவாய்ப்பு 2021 – நுழைவுச் சீட்டு வெளியீடு! நவம்பர் 20 முதல் தேர்வு!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நவம்பர் 20 முதல் நடக்க உள்ள ப்ரோபேஷனரி அதிகாரி பணிக்கான தேர்வின் நுழைவு சீட்டை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவு சீட்டு வெளியீடு:

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ப்ரோபேஷனரி அதிகாரி (SBI PO) 2021 பணிக்கான தேர்வுகள் குறித்து முன்னதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கான தேர்வுகள் முதன்மை, மெயின்ஸ் மற்றும் நேர்காணல் என்று மூன்று கட்டங்களாக நடத்தப்படும். SBI PO ப்ரிலிம்ஸ் தேர்வு நவம்பர் 20, 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஆஃப்லைனில் நடைபெற உள்ளது. SBI PO ப்ரிலிம்ஸ் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நாளை (நவ.10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

முதன்மை தேர்வுக்கான நுழைவு சீட்டு தேர்வின் கடைசித் தேதியான நவம்பர் 27 வரை இணையதளத்தில் கிடைக்கும். விண்ணப்பதாரர்களுக்கு SBI PO அட்மிட் கார்டு 2021ஐப் பதிவிறக்க, பயனர்பெயர் அல்லது பதிவு எண் மற்றும் கடவுச்சொல் அல்லது பிறந்த தேதி போன்ற சான்றுகள் தேவைப்படும். தேர்வானது ஆங்கில மொழி, அளவு திறன் மற்றும் பகுத்தறிவு திறன் பிரிவுகளில் இருந்து 100 கேள்விகளைக் கொண்டிருக்கும். தேர்வு மொத்தம் 1 மணி நேரம் நடக்கும். அதில் ஒவ்வொரு பிரிவிற்கும் 20 நிமிடங்கள் ஒதுக்கப்படும். முதல்நிலைத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் IBPS ஒரு தகுதிப் பட்டியலை வெளியிடும். விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ பிஓ அட்மிட் கார்டு 2021ஐ பதிவிறக்கம் செய்து, தேர்வு நாள் வழிமுறைகளை கவனமாக படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எஸ்பிஐ பிஓ அட்மிட் கார்டு 2021ஐப் பதிவிறக்கம் செய்யும் முறை:
  • பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான Sbi.co.in க்கு செல்ல வேண்டும்.
  • முகப்புப் பக்கத்தின் அடிக்குறிப்பு மெனுவில் கிடைக்கும் ‘Careers’ என்ற பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்னர் ‘சமீபத்திய அறிவிப்பு’ பகுதியைத் தேர்ந்தெடுத்து, ‘Download preliminary call letter’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • SBI PO அட்மிட் கார்டு 2021 என்ற இணைப்பை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில், உள்நுழைவதற்கு பதிவு எண் அல்லது ரோல் எண் மற்றும் கடவுச்சொல் அல்லது பிறந்த தேதியை உள்ளிட வேண்டும்.
  • SBI PO ப்ரிலிம்ஸ் தேர்வுக்கான அனுமதி அட்டையை சரிபார்த்து பதிவிறக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!