HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்கள் திருத்தம்!

0
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்கள் திருத்தம்!
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்கள் திருத்தம்!
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்கள் திருத்தம்!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான HDFC, அதன் சேமிப்பு வங்கிக் கணக்கு வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை சமீபத்தில் திருத்தியுள்ளது. இந்த திருத்தம் பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வந்துள்ளது.

சேமிப்பு கணக்கு

சமீப காலமாக இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனங்கள் பல்வேறு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை திருத்தி அறிவித்து வருகிறது. அந்த வகையில் SBI வங்கியை தொடர்ந்து தற்போது HDFC வங்கியும் தனது வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை திருத்தி அறிவித்துள்ளது. இது தொடர்பாக HDFC வங்கி வெளியிட்டுள்ள இணையதள அறிக்கையில், ‘HDFC வங்கியில் சேமிப்பு வங்கி டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதம் திருத்தப்பட்டுள்ளது. இது 2022 பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

BOB வங்கியில் ரூ.50000 சம்பளத்தில் வேலை – பிப்.14ம் தேதி கடைசி நாள்! முழு விபரங்கள் இதோ!

இந்த தகவலின் படி, HDFC வங்கி இப்போது 50 லட்சத்திற்கும் குறைவான சேமிப்புக் கணக்குகளுக்கு ஆண்டுக்கு 3 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும், ரூ.50 லட்சத்துக்கும் மேலான மற்றும் ரூ.1,000 கோடிக்கும் குறைவான சேமிப்புக் கணக்குகளுக்கு ஆண்டுக்கு 3.50 சதவீத வட்டி விகிதத்தையும், ரூ.1,000 கோடிக்கு மேல் சேமிப்பு இருப்புகளுக்கு ஆண்டுக்கு 4.50 சதவீத வட்டியையும் வழங்குகிறது. இந்த திருத்தப்பட்ட விகிதங்கள் உள்நாட்டு, NRO மற்றும் NRE சேமிப்புக் கணக்குகளுக்கும் பொருந்தும் என்று HDFC வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் HDFC வங்கியின் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் பின்வருமாறு:

  • ரூ.50 லட்சத்துக்கும் குறைவான சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் – 3.00%
  • ரூ. 50 லட்சம் மற்றும் ரூ. 1000 கோடிக்கு குறைவான சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் – 3.50%
  • 1000 கோடி மற்றும் அதற்கு மேல் உள்ள சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் – 4.50%

கடந்த பல வருடங்களில் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை திருத்திய முதல் வங்கி HDFC வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், ICICI வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை திருத்தி இருந்தது. இது தவிர கடந்த மாதத்தில் கூட HDFC வங்கி, அதன் நிலையான வைப்புத் தொகைகளுக்கு (FD) புதிய வட்டி விகிதங்களை திருத்தி அறிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!