தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

சம்பள உயர்வு

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சியின் முடிவில் அதற்குரிய பின்னூட்டத்தை பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் எழுதி தருவார்கள். இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களின் அனுபவத்திற்கு தகுந்தவாறு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

1 – 7ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 28 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – தேர்தல் எதிரொலி!

இந்த நிலையில் மாநில திட்ட இயக்குநர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்காக ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் தெரிவித்தாவது, இனிமேல் 1 முதல் 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியின் முடிவில் கொள்குறி வகையில் வினாத்தாள் கொண்ட தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழை பெறுபவர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்கப்படும்.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் – 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள்!

இதற்கு ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்ட செயலாளரிடம் கூறியதாவது, மாநில திட்ட இயக்குனரின் சுற்றறிக்கை புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக கொண்டு வருவதாக தெரிகிறது. இது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சான்றிதழை பெறாத ஆசிரியர்கள் நிலைமை என்ன ஆகும் என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் முதல் அனைத்து துறையினர்களுக்கும் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுமா? என்றும் கூறியுள்ளார். ஆசிரியர்களின் அனுபவத்திற்கு தகுந்தவாறு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here