மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – விரைவில் முக்கிய அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் - விரைவில் முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் - விரைவில் முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – விரைவில் முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஃபிட்மெண்ட் காரணி உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகழ்ச்சியை அளித்துள்ளது.

முக்கிய அறிவிப்பு:

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் நிம்மதி அடையும் அளவுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் தவிர ஃபிட்மெண்ட் காரணி (Fitment Factor) மூலம் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியர்களின் சம்பளத்தை இரண்டு மடங்குக்கு மேல் உயர்த்தும் காரணிதான் ஃபிட்மெண்ட் காரணி ஆகும். இந்த வகையில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் , மத்திய அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மெண்ட் காரணியை உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post Office இல் கணக்கு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – மொபைல் செயலி அறிமுகம்!

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் பல நாள் கோரிக்கையாக அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பது ஆகும். ஏனென்றால் முன்னதாக 2016 ஆம் ஆண்டில் Fitment Factor அதிகரிக்கப்பட்டது. அப்போது ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.6000 இருந்து ரூ.18000 ஆக உயர்த்தப்பட்டது எனது குறிப்பிடத்தக்கது. இந்த Fitment Factor அதிகரிப்பு தகவல் அடிப்படையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.18000 த்திலிருந்து 26000 ரூபாயாக உயரும் என மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் கட்டாயம் வர உத்தரவு – கல்வித்துறை அறிவிப்பு!

இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும். இது குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு போனஸ் என கூறலாம். இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக உள்ளது. இந்த வகையில் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது குறித்து அரசு ஊழியர் சங்கங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மற்றும் விரைவில் அடிப்படை சம்பள உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!