ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ ஷபானாவுக்கு நேர்ந்த சோகம் – நண்பர்களை பற்றி உருக்கமான பதிவு! ரசிகர்கள் ஷாக்!

0
ஜீ தமிழ் 'செம்பருத்தி' ஷபானாவுக்கு நேர்ந்த சோகம் - நண்பர்களை பற்றி உருக்கமான பதிவு! ரசிகர்கள் ஷாக்!
ஜீ தமிழ் 'செம்பருத்தி' ஷபானாவுக்கு நேர்ந்த சோகம் - நண்பர்களை பற்றி உருக்கமான பதிவு! ரசிகர்கள் ஷாக்!
ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ ஷபானாவுக்கு நேர்ந்த சோகம் – நண்பர்களை பற்றி உருக்கமான பதிவு! ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சின்னத்திரையில் அதிகளவு ரசிகர்களை கொண்டிருக்கும் முன்னணி சீரியல் நடிகையான ஷபானா தற்போது நட்பு மற்றும் நண்பர்கள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

நடிகை ஷபானா

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த பிரபல மலையாள சீரியல் நடிகை ஷபானா ஷாஜகான் சமீபத்தில் விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ நடிகர் ஆர்யனை திருமணம் செய்து கொண்டார். எப்போதும் துறுதுறுவென்று, ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷபானா தன்னுடன் ஒரே சேனலில் நடித்து வந்த நடிகைகள் நக்ஷத்ரா, சைத்ரா ரெட்டி, ரேஷ்மா ஆகியோருடன் நெருங்கிய நட்பு வைத்திருந்தார். இவர்களது ஃபிரண்ட்ஷிப் கோல்ஸ் பற்றி பேசாத ரசிகர்களே கிடையாது. அந்த அளவுக்கு இவர்கள் நால்வரும் சின்னத்திரையில் நெருங்கிய தோழிகளாக வலம் வந்துகொண்டிருந்தனர்.

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? உண்மை நிலவரத்தை தெரிவித்த கல்வித்துறை!

இப்படி இருக்க இவர்களது நண்பர்கள் குழுவில் இருந்து நடிகை சைத்ரா ரெட்டி முதலாவதாக திருமணம் செய்து கொண்டு இவர்களை விட்டு தனியே சென்று விட்டார். தொடர்ந்து கடந்த ஆண்டில் ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் தங்களது காதலர்களை கரம் பிடித்தனர். இருந்தாலும் திருமணத்திற்கு பிற்பாடு கூட இவர்கள் ஒன்றாக சுற்றி வருகின்றனர். இவர்களது நட்பு குறித்து பேசும் போது, குறிப்பாக ஷபானா பற்றி பலரும் சொல்லக்கூடிய கருத்து என்னவென்றால், ஃபிரன்ட்ஷிப்காக ஷபானா எதுவும் செய்வாராம். அதே போல இவருக்கும் சொல்லக்கூடிய அளவுக்கு நண்பர்கள் வட்டாரம் உண்டு.

இப்படி ஃபிரன்ட்ஷிப்காக முக்கியத்துவம் கொடுத்து வரும் நடிகை ஷபானா ஒரு எமோஷனல் ஆன பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. அதாவது, ‘நீங்கள் நண்பர்கள் என்று நினைத்திருக்கும் எக்கச்சக்கமானவர்களிடம் இருந்து உண்மையானவர்களை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? உங்கள் அம்மா உடல்நிலை சரியில்லாத போது, அவர்களின் ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டு உங்களோடு இருக்கிறார்களா? இந்த உலகமே இடிந்து விட்டது போல உணரக்கூடிய நேரத்தில், ஒரு அப்பாவை போல முழு இரவும் உங்களுக்கு ஆறுதலாக இருக்கிறார்களா?

2 போன் கால்களை எடுக்காவிட்டால் உங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்களா? பார்ட்டியில் குடித்து விட்டு உங்களுடன் எடுக்கும் புகைப்படங்களை ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்கிறார்களா? உண்மையான நண்பர்கள் யார் என்றால், உங்களுடைய கஷ்டத்தில் தோள் கொடுத்து உங்களது வருத்தங்களை ஷேர் செய்கிறவர்கள் மட்டும் தான் உங்கள் மனதில் கடைசி வரை இடம்பிடித்திருப்பார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவை கண்ட அவரது ரசிகர்கள் ஷபானாவுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே ஏதேனும் பிரச்சனை எழுந்திருக்குமோ என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!