ரூ.6,000 வெள்ள நிவாரணம் எப்போது கிடைக்கும் ? – அரசின் நடவடிக்கை என்ன!

0
ரூ.6,000 வெள்ள நிவாரணம் எப்போது கிடைக்கும் ? - அரசின் நடவடிக்கை என்ன!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தமிழக அரசு ரூபாய் 6000 வெள்ள நிவாரண உதவித்தொகை வழங்கி வந்தது.

வெள்ள நிவாரணம்:

முன்னதாக மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் குறிப்பிட்ட சில ரேஷன் அட்டை பிரிவினருக்கு வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் புறநகர் பகுதியில் வசித்த பெரும்பாலான மக்களும் தங்களின் உடைமைகளை இழந்து உதவி தொகை வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று வெளியூரில் இருந்து சென்னை வந்தவர்கள், ரேஷன் அட்டை இல்லாதவர்கள், புதிதாக திருமணமானவர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகிய பிரிவினருக்கு ரூபாய் 6000 வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்றும் தங்களின் பாதிப்பு குறித்த ஆவணங்களை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்குமாறு அரசு அறிவித்திருந்தது.

மாதம் ரூ.16,000/- சம்பளத்தில் தமிழ்நாடு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இதன்படி மொத்தம் 5.5 லட்சம் விண்ணப்பங்கள் டிசம்பர் மாதம் பெறப்பட்டது. விண்ணப்பங்களை பெற்று இரண்டு மாதங்களை கடந்த நிலையிலும் இப்போது வரை இவர்களுக்கான வெள்ள நிவாரண தொகை குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருவாய் பேரிடர் மேலாண்மை துறைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் நடந்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சில நாட்களுக்கு முன்னதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது வரை இதற்கான நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வெள்ள நிவாரண தொகை கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!