
LIC Dhan Varsha திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.93 லட்சம் ரிட்டன்ஸ் – முழு விவரம் உள்ளே!
LIC நிறுவனத்தில் பல வகையான பாலிசி திட்டங்கள் உள்ளது. தற்போது இதில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.93 லட்சம் பெறுவதற்கான திட்டம் குறித்து விரிவாக பார்ப்போம்.
சேமிப்பு திட்டம்:
தற்போது வங்கிகளை காட்டிலும் அஞ்சல் அலுவலகம் மற்றும் LIC காப்பீட்டு நிறுவனத்தில் அதிக லாபம் தரும் பல வகையான திட்டங்கள் உள்ளன. இதில் தற்போது LIC நிறுவனத்தின் Dhan Varsha திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இத்திட்டத்தில் ஒற்றை பிரீமியம் மட்டுமே செலுத்த முடியும். இத்திட்டத்தின் கீழ் உங்களுக்கு பாதுகாப்பும் மற்றும் அதிகபட்ச சேமிப்பு தொகையும் கிடைக்கிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் இத்திட்டத்தின் முதிர்வு காலத்தில் உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய சேமிப்பு தொகையை வழங்க முடியும். நீங்கள் முதிர்வு காலம் முடிவடைதற்குள் இறந்து விட்டால் உங்களின் சேமிப்பு பணம் தங்களின் நாமினிக்கு வழங்கப்படும். அதன்படி இத்திட்டத்தின் கீழ் நீங்கள் 35 வயதில் 10 லட்சம் முதலீடு செய்து, 15 ஆண்டுகால முதிர்வு காலத்தை தேர்வு செய்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம்.
TN TET தேர்வு எழுதவுள்ளோர் கவனத்திற்கு – TNOU பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இப்போது இத்திட்டத்தின் கீழ் இணைந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு இறந்து விட்டால் ரூ. 91,49,5000 தொகை நாமினிக்கு வழங்கப்படும். இதே போல் 15 ம் ஆண்டில் நீங்கள் இறந்து விட்டால் ரூ.93,49,500 வரை கிடைக்கும். இதையடுத்து, நீங்கள் முதிர்வு காலம் முழுவதும் உயிருடன் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ரூ.16 லட்சம் சேமிப்பு தொகையாக கிடைக்கும்.