Home news அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – இந்த தவறை செய்தால் கார்டு ரத்து!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – இந்த தவறை செய்தால் கார்டு ரத்து!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – இந்த தவறை செய்தால் கார்டு ரத்து!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - இந்த தவறை செய்தால் கார்டு ரத்து!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – இந்த தவறை செய்தால் கார்டு ரத்து!

இந்தியாவில் ரேஷன் கார்டு மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது நீண்ட காலம் பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்து செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் தனிநபரின் முகவரி சான்றாகவும் அடையாள ஆவணமாகவும் ரேஷன் கார்டு விளங்குகிறது. இந்த ரேஷன் கார்டை பயன்படுத்தி மலிவான விலையில் உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்று கொள்ளலாம். மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயற்படுத்தப்படுகிறது. அனைத்து குடும்பத்தினரும் ரேஷன் கார்டு வைத்திருப்பது அவசியமானதாகும். அதனால் இந்த ரேஷன் கார்டுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோருக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

இதனை தொடர்ந்து தற்போது ரேஷன் கடைகளில் பொருட்களை பெறுவதற்கு பயோமெட்ரிக் முறை பின்பற்றப்படுகிறது. இதன் மூலமாக ரேஷன் பொருட்கள் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்ய முடிகிறது. ஏனெனில் இந்த பயோமெட்ரிக் முறையில் உணவு பொருட்கள் அனைத்தும் கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்த பிறகு விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு வழங்கும் ரேஷன் பொருட்களை நீண்ட காலமாக வாங்காமல் இருப்பவர்களை பற்றி அரசு கணக்கெடுத்து பட்டியலை தயார் செய்து வருகிறது.

தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம் – பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு! பொதுமக்கள் அதிர்ச்சி!

அதன்படி 6 மாதங்கள் ஒருவர் ரேஷன் பொருட்களை வாங்கவில்லையெனில் அவரின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நீண்ட காலமாக உணவு பொருட்களை வாங்கவில்லை என்பதால் அந்த நபருக்கு ரேஷன் உணவு பொருட்கள் அத்தியாவசியமற்ற பொருளாக இருக்கிறது. அதனால் அவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க தகுதியற்றவர் என்று ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். இந்த நடைமுறை டெல்லி, பீகார் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here