ராஜா ராணி’ நடிகர் சரவணனுக்காக ஒன்று கூடிய சீரியல் பிரபலங்கள் – பிறந்தநாள் வாழ்த்து!

0
ராஜா ராணி' நடிகர் சரவணனுக்காக ஒன்று கூடிய சீரியல் பிரபலங்கள் - பிறந்தநாள் வாழ்த்து!
ராஜா ராணி' நடிகர் சரவணனுக்காக ஒன்று கூடிய சீரியல் பிரபலங்கள் - பிறந்தநாள் வாழ்த்து!
ராஜா ராணி’ நடிகர் சரவணனுக்காக ஒன்று கூடிய சீரியல் பிரபலங்கள் – பிறந்தநாள் வாழ்த்து!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சித்து, சமீபத்தில் தனது பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடி இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சித்து

வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சித்து, கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த தொடரில் காதலித்த பெண்ணை விட்டு, சூழ்நிலை காரணமாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மனதளவில் சிக்கித் தவிக்கும் ஒரு கதாநாயகனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இவர். இந்த தொடரில் இவருக்கு ஜோடியான பிரபல மலையாள சீரியல் நடிகை ஸ்ரேயா அஞ்சன் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி – குவியும் பாராட்டுக்கள்!

இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது ஏக ஆதரவை கொடுத்து வந்தனர். இதற்கு பின்பாக திருமணம் சீரியல் முடிந்தவுடன் சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இதை தொடர்ந்து வெள்ளித்திரையின் மற்றுமொரு புதிய ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இதையடுத்து நடிகர் சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்து வருகிறார்.

தமிழகத்தின் சிறந்த coaching centre

நடிகை ஷ்ரேயா அஞ்சனும் தமிழ் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் 30 வயதை கடந்திருக்கும் நடிகர் சித்து சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அந்த வகையில் வழக்கமான பாணியில் சித்துவை, ஸ்ரேயா சர்ப்ரைஸ் செய்ய நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை சிறப்பாக முடித்துள்ளார் சித்து. இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாக, சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் பலரும் சித்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!