“பாக்கியலட்சுமி” சீரியலில் நடந்த மரணம், கதறும் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!

0
"பாக்கியலட்சுமி" சீரியலில் நடந்த மரணம், கதறும் குடும்பத்தினர் - ப்ரோமோ ரிலீஸ்!
“பாக்கியலட்சுமி” சீரியலில் நடந்த மரணம், கதறும் குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் வெளியாகி வருகிறது. ராமமூர்த்தி தாத்தா உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதால் அவர் இறந்துவிடுவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. கோபி ராதிகாவை திருமணம் செய்ய இருப்பதாக மயூரா தாத்தாவிடம் சொல்ல, அதை கேட்ட ராமமூர்த்தி தாத்தா வருத்தப்படுகிறார். அதனால் அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகிறது. மேலும் கோபி வந்ததும் அது பற்றி அவர் கேட்க, வீட்டில் இருக்கும் அனைவரிடமும் உண்மையை சொல்வேன் என மிரட்டுகிறார். சொல்லுங்கள் என கோபி சொல்ல, தாத்தா மாடிப்படியில் இறங்கி வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது தாத்தாவிற்கு பக்கவாதம் ஏற்பட்டு கால் தவறி படியில் விழுகிறார். அதனால் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவரால் இனிமேல் பேச முடியாது எனவும் மூளையில் ரத்தம் உறைந்து இருப்பதாக சொல்ல தாத்தாவை நினைத்து குடும்பமே வருத்தப்படுகிறார்கள் கோபியும் தன்னால் தான் அப்பாவிற்கு இந்த நிலைமை என நினைத்து வருத்தப்படுகிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகள் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” அதிர்ச்சி அருண் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

அதில் தாத்தா உடல்நிலை மோசமாகி இறந்து போக குடும்பமே உடைந்து போகிறது. எழில் செழியன் கோபி என அனைவரும் அதிர்ச்சி அடைய, பாக்கியாவிற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. தாத்தா இறப்பு பற்றி தெரிந்த அமிர்தாவும் அதிர்ச்சி அடைகிறார். ராதிகாவும் இந்த விஷயம் தெரிந்து வருத்தப்படுகிறார். இது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ என்பதால் சீரியலில் இனி அப்படி நடக்க வாய்ப்பில்லை என்பதால் ரசிகர்கள் சற்று நிம்மதியில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here