ஆதார் கார்டில் உள்ள போட்டோ பிடிக்கவில்லையா? எளிதாக மாற்றுவது எப்படி? வழிமுறைகள் இதோ!

0
ஆதார் கார்டில் உள்ள போட்டோ பிடிக்கவில்லையா? எளிதாக மாற்றுவது எப்படி? வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டில் உள்ள போட்டோ பிடிக்கவில்லையா? எளிதாக மாற்றுவது எப்படி? வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டில் உள்ள போட்டோ பிடிக்கவில்லையா? எளிதாக மாற்றுவது எப்படி? வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றி கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எளிதாக இதை செய்யலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ஆதார் அட்டை:

இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவரிடமும் ஆதார் அட்டை உள்ளது. மத்திய அரசால் வழங்கப்படும் இந்த ஆதார் அட்டை ரேஷன் கார்டு, வாக்குரிமை அட்டை போன்றவற்றை போல முக்கிய ஆவணமாக உள்ளது. அனைத்து அரசு, தனியார் மற்றும் தனிநபர் சார்ந்த பிற வேலைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாம் எங்கு சென்றாலும் ஆதார் அட்டை அவசியம் என்பதால் எல்லா நேரங்களிலும் நாம் அதை கைகளில் வைத்திருப்பது அவசியமாகும். இந்த ஆதாரில் தேவைக்கேற்ற விவரங்களை புதுப்பித்து கொள்ளும் வசதி உள்ளது.

HDFC, PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதங்களில் மாற்றம்!

அந்த வகையில் ஆதாரில் முகவரி , பிறந்த தேதி, புகைப்படம் மொபைல் எண் போன்ற விவரங்களை மாற்றிக்கொள்ளலாம். இந்த நிலையில் ஆதரில் புகைப்படம் மாற்ற வேண்டியது என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் நாம் வயதுக்கு ஏற்ப முக மாற்றங்களுக்கும் ஏற்படுகிறது. அதனால் அவ்வப்போது அப்டேட் செய்வது நல்லது. மேலும் உங்களுக்கு பிடித்த தெளிவான படத்தை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். புகைப்படத்தை மாற்ற முதலில் ஆன்லைன் மூலம் அப்பாயிண்ட்மென்ட் பெற வேண்டும்.

ஆன்லைன் மூலம் அப்பாயிண்ட்மென்ட் பெறும் முறைகள்:
  • முதலில் அதிகாரபூர்வ இணையதளமான https://uidai.gov.in/ தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் ஆதார் அப்டேட் என்பதை கிளிக் செய்து book an appointment என்பதை தேர்வு செய்யவும்.
  • மாநிலம், மாவட்டம், உங்களது முகவரி போன்றவற்றை உள்ளீட்டு என்ரோல்மென்ட் மையத்தை தேடவும்.
  • ஆதார் விவரங்களை அப்டேட் செய்வதற்கான அப்பாயின்மென்ட் தேதி, நேரம் ஆகியவற்றை குறிப்பிடவும்.
  • மேற்கண்ட செயல்முறைகள் முடிந்த பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு அப்பாயின்மென்ட் எண் வரும்.
  • அதை வைத்து கொண்டு அருகில் உள்ள என்ரோல்மென்ட் மையத்திற்கு சென்று உங்கள் புகைப்படத்தை மாற்றலாம்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!