HDFC, PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதங்களில் மாற்றம்!

0
HDFC, PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதங்களில் மாற்றம்!
HDFC, PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதங்களில் மாற்றம்!
HDFC, PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதங்களில் மாற்றம்!

நடப்பு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் அரசு வங்கியை தொடர்ந்து, தனியார் வங்கிகளும் சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து உள்ளது. இந்த வகையில் HDFC வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி ஆகிய வங்கிகள் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது.

வட்டி விகிதங்களில் மாற்றம்:

HDFC வங்கி ,வங்கிகளில் கணக்குகளை திறக்க விரும்புபவர்களும், ஏற்கனவே கணக்குகள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை உயர்த்துவதாக செய்து குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் கணக்கில் தினசரி இருப்புத்தொகைக்கு வட்டி கணக்கிடப்படும்.அந்த வகையில் ரூ.50 லட்சத்துக்கும் குறைவான சேமிப்புக் கணக்கில் 3 சதவீத வட்டியும், ரூ.50 லட்சத்துக்கு மேல் ரூ. 1,000 கோடிக்கு குறைவாக உள்ள இருப்புக்கு 3.50 சதவீத வட்டியும் அளிக்கப்படும்

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

இதனை தொடர்ந்து பஞ்சாப் & சிந்து வங்கி ,ரூ.10 கோடிக்கும் குறைவான சேமிப்பு கணக்கு இருப்புக்கு 3% வட்டி விகிதம் அளிக்கப்பட்டுள்ளது. 10 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் உள்ள இருப்புத் தொகைக்கு வட்டி விகிதம் 3.20% ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இந்த விகிதங்கள் உள்நாட்டு, NRO மற்றும் NRE சேமிப்புக் கணக்குகளுக்குப் பொருந்தும். மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கி PNB ரூ.10 லட்சம் முதல் ரூ.500 கோடிக்கும் குறைவான இருப்புகளுக்கு பிப்ரவரி முதல் 2.80% ஆக மாற்றப்பட்டுள்ளது. சேமிப்பு நிதி இருப்பில் ரூ.500 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட கணக்கு இருப்புக்கு 3.25 விகித வட்டி வழங்கப்படும்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை – வெளியாகும் சூப்பர் அறிவிப்பு!

இந்த வகையில் RBL வங்கி, சேமிப்பு கணக்குகள், நிலையான வைப்புத்தொகை (Fixed Deposit), தொடர் வைப்புத்தொகை (RD) மீதான வட்டி விகிதங்களை மாற்றி வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புதிய விகிதங்கள் பிப்ரவரி 3, 2022 முதல், வங்கி 7-14 நாட்களில் முதிர்ச்சியடையும் ரூ. 3 கோடிக்கும் குறைவான வைப்புகளுக்கு 3.25% வட்டி விகிதத்தை வழங்கும்,181 நாட்கள் முதல் 240 நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 5% வட்டியும் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!