பான் கார்டில் உள்ள புகைப்படத்தை ஆன்லைன் மூலமாக மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
பான் கார்டில் உள்ள புகைப்படத்தை ஆன்லைன் மூலமாக மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
பான் கார்டில் உள்ள புகைப்படத்தை ஆன்லைன் மூலமாக மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
பான் கார்டில் உள்ள புகைப்படத்தை ஆன்லைன் மூலமாக மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்திய வருமான வரித்துறையால் பான் கார்டு வழங்கப்படுகிறது. இந்த பான் கார்டு பணப் பரிவர்த்தனைக்கும் மற்றும் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கும் பயன்படுகிறது. இதில் உள்ள புகைப்படத்தை ஆன்லைன் மூலமாக மாற்றுவதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

பான் கார்டு

இந்திய வருமான வரித்துறையால் பான் கார்டு வழங்கப்படுகிறது. இந்த பான் கார்டு பணப் பரிவர்த்தனைக்கும் மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கும் பயன்படுகிறது. அதனால் இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும். இது ஒரு தனிப்பட்ட நபரின் அடையாளம் மட்டுமின்றி பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பான் கார்டு பெர்மெனன்ட் அக்கவுண்ட் நம்பராக கருதப்படுகிறது. அத்துடன் இது நிரந்தர கணக்கு எண் எனப்படும் 10 இலக்க ஆல்பா நியூமெரிக்கல் நம்பர்களை பெற்றுள்ளது.

IND vs SA: 3வது டெஸ்டில் களமிறங்குவேன் – கேப்டன் விராட் கோஹ்லி உறுதி!

இந்த பான் கார்டு மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். அத்துடன் ஒரு வங்கியில் புதிய கணக்கை தொடங்கவும் இந்த பான் கார்டு பயன்படுகிறது. இதில் எழுத்துப் பிழை, கையொப்பம் அல்லது புகைப்படம் பொருந்தாதது உள்ளிட்டவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும். தற்போது பான் கார்டில் மிகவும் பழைய புகைப்படம் அல்லது சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் உள்ளது என்றால் அதனை ஆன்லைன் மூலமாக சுலபமாக மாற்றி கொள்ளலாம்.

1. நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டின் (NSDL) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று UTITSL-இன் போர்ட்டலுக்குள் https://www.pan.utiitsl.com/PAN/index.jsp என்ற இணையதளம் வழியாக செல்ல வேண்டும்.

2. இப்போது அப்ளிகேஷன் டைப் பிரிவின் கீழ் உள்ள மெனுவில் ஏற்கனவே உள்ள பான் டேட்டாவில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. அடுத்ததாக ‘கேட்டகிரி டைப்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் Individual என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தகவல்களை உள்ளீட்டு அதன் பின் கேப்ட்சா குறியீட்டை கொடுத்து முடித்த பிறகு சமர்ப்பிக்க வேண்டும்.

5. தற்போது KYC என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் ‘புகைப்படம் பொருந்தவில்லை’ மற்றும் ‘கையொப்பம் பொருந்தவில்லை’ போன்ற விருப்பங்கள் காண்பிக்கப்படும்.

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு – மாநில அரசு அதிரடி!

6. அதில் புகைப்படம் பொருந்தவில்லை என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக தேவையான புகைப்படத்தை உள்ளீட்டு Next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

7. அடுத்ததாக அடையாள அட்டை, முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான ஆதாரங்களை இணைக்க வேண்டும்.

8. இதையடுத்து டிக்ளரேஷன் செக்பாக்ஸை டிக் செய்து Submit பட்டனை அழுத்த வேண்டும்.

9. அதன்பின் கட்டணமாக ரூ.101 செலுத்த வேண்டும். வெளிநாட்டினராக இருப்பின் ரூ.1101 என கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

10. இதற்கு அடுத்த 15 இலக்க எண் தங்களுக்கு அனுப்பப்படும். இப்போது தங்கள் விண்ணப்பத்தை நகல் எடுத்து வருமான வரித்துறையின் பான் சேவை பிரிவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

11. அத்துடன் விண்ணப்பம் எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதை 15 இலக்க ஒப்புகை எண்ணை பயன்படுத்தி கண்காணிக்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!