ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதியை மாற்றுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!

0
ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதியை மாற்றுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!
ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதியை மாற்றுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!
ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதியை மாற்றுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!

இந்திய குடிமக்களிடம் இருக்க வேண்டிய முக்கியமான ஆவணமாக ஆதார் கருதப்படுகிறது. ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி முதலியனவற்றை தங்களது மொபைல் போனில் மாற்றுவது குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆதார் அட்டை:

இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விவரங்களை மாற்ற அல்லது புதுப்பிக்க UIDAI வழங்கிய பல சேவைகளை வழங்கி வருகிறது.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

பெயர் அல்லது பிறந்த தேதி தவறாக இருக்கும் பட்சத்தில் மொபைல் போன் மூலம் அவற்றை மாற்ற UIDAI எளிய முறைகளை வழங்கியுள்ளது. அதன்படி, பயனர்கள் ssup.uidai.gov.in/ssup/ யில் லாகின் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் ஆதார் எண்ணை டைப் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து தேவையான சேவையை தேர்வு செய்து கேட்கப்படும் தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.

TNPSC குரூப் 2 & குரூப் 4 VAO தேர்வு தேதி 2021 வெளியீடு? தேர்வர்கள் கவனத்திற்கு!

அதன் பின் சேவைக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இன்டர்நெட் பேங்கிங் மூலம் சேவை கட்டணம் செலுத்தும் வசதிகள் இதில் உள்ளது. ஆதார் எண்ணில் பெயர் மற்றும் பிறந்த தேதியை மாற்றுபவர்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கையில் வைத்திருக்க வேண்டும். அந்த எண்ணிற்கு வரும் OTP எண்ணை டைப் செய்வதன் மூலம் மட்டுமே பெயர் முதலியனவற்றை மாற்ற முடியும். மீண்டும் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பும் பட்சத்தில் ஆதார் மையத்தை அணுகவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!