Home Entertainment விஜய் டிவி சூப்பர் சிங்கரில் இருந்து விலகி ‘பிக் பாஸ்’ நண்பர்களுடன் ஊர் சுற்றும் ப்ரியங்கா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் இருந்து விலகி ‘பிக் பாஸ்’ நண்பர்களுடன் ஊர் சுற்றும் ப்ரியங்கா – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி சூப்பர் சிங்கரில் இருந்து விலகி ‘பிக் பாஸ்’ நண்பர்களுடன் ஊர் சுற்றும் ப்ரியங்கா – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி சூப்பர் சிங்கரில் இருந்து விலகி 'பிக் பாஸ்' நண்பர்களுடன் ஊர் சுற்றும் ப்ரியங்கா - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி சூப்பர் சிங்கரில் இருந்து விலகி ‘பிக் பாஸ்’ நண்பர்களுடன் ஊர் சுற்றும் ப்ரியங்கா – வைரலாகும் வீடியோ!

பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் மிகவும் ஒற்றுமையாக இருந்த நண்பர்களான ப்ரியங்காவின் குழு தற்போது சேர்ந்து செய்துள்ள சேட்டைகள் அனைத்தும் வீடியோவாக வெளியாகியுள்ளது. இதனை பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ப்ரியங்கா:

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்து சென்றது. தங்களுக்கு பிடித்த பிரபலங்கள் பலரின் சொந்த குணத்தை பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி இருப்பதால் அதிக அளவிலான ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ரசித்து வந்தனர். ஒவ்வொரு சீசனிலும் ஒரு நண்பர்கள் பட்டாளம் உருவாகும். கடந்த 5 வது சீசனில் ப்ரியங்கா, அபிஷேக், பாவணி மற்றும் மதுமிதா நட்புடன் உள்ளே சுற்றினார்கள்.

பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியாக நடிப்பவர் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

ஆனால் இவர்கள் நிகழ்ச்சி முடிந்த பிறகும் நட்பை தொடர்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதன்பிறகும், இவர்களின் நட்பு வளர்ந்து வருகிறது. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த ப்ரியங்கா தற்போது அதில் இருந்து விலகியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. ஆனால் ப்ரியங்கா கூலாக தனது நண்பர்களுடன் ஹைதராபாத் நகரை சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ அல்டிமேட்டில் என்ட்ரி கொடுக்கும் லாஸ்லியா – ரசிகர்கள் உற்சாகம்!

இரவு நேரத்தில் அங்கு சார்மினார் பகுதியில் சுற்றி அங்குள்ள உணவுகளை ருசித்து, தெருக்களில் விற்கும் அணிகலன்களை வாங்கி மகிழ்ந்து வருகிறார். இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கிண்டல் செய்து கொண்டு எதை பற்றியும் கவலை இல்லாமல் சுற்றி அலைந்து வருவதை ப்ரியங்கா தனது யூடுயூப் சேனலில் வீடியோவாக எடுத்து அதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து அனைத்து ரசிகர்களும் ஆச்சர்யமடைந்து உள்ளனர்.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here