Home Entertainment விஜய் டிவி ‘பிக் பாஸ்’ அல்டிமேட்டில் என்ட்ரி கொடுக்கும் லாஸ்லியா – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ அல்டிமேட்டில் என்ட்ரி கொடுக்கும் லாஸ்லியா – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ அல்டிமேட்டில் என்ட்ரி கொடுக்கும் லாஸ்லியா – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' அல்டிமேட்டில் என்ட்ரி கொடுக்கும் லாஸ்லியா - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ அல்டிமேட்டில் என்ட்ரி கொடுக்கும் லாஸ்லியா – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் ஒ.டி.டி. யில் ஒளிபரப்பாகி வரும் புகழ் பெற்ற பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 5 சீசன்களிலும் பங்கேற்ற 14 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். தற்போது வைல்ட் கார்ட் என்ட்ரியாக லாஸ்லியா மரிய நேசன் வருவார் என்று கூறப்படுகிறது.

பிக்பாஸ் அல்டிமேட்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் ஒளிபரப்பட்டு வருகிறது. வெவ்வேறு போட்டியாளர்கள் தினந்தோறும் புதிய டாஸ்க்குகள் என்று விருப்பமான நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது. விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த பிக் நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது. தற்போது 5 சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்கள் இணைந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

12 வருடங்களுக்கு பின் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல வில்லி நடிகை – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி, அபினய், நிரூப், வனிதா விஜயகுமார், தாமரை, பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, சுஜா வருனி, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி டிஸ்னி பளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. வழக்கம் போல் நடிகர் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். தற்போது அவர் விக்ரம் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளதால் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

“ராஜா ராணி” புகழ் ஆல்யா, சஞ்சய் மகள் அய்லாவின் 2வது பிறந்தநாள் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா மரிய நேசன் வரவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் சீசன் 3ல் பங்கேற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இவருக்கு அடுத்தது அடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த ப்ரன்சிப் படம் மூலம் லாஸ்லியா வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தற்போது கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வரவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here